பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

வெளிச்சத்தை நோக்கி...

அங்கே இருப்பது போன்ற உணர்வு. ரகுராமனின் குரல் ஒலித்தது.

"மிஸ்டர் மெய்யப்பன், இப்போ அலுவலகத்துல வேலை பார்க்கிங்க... உங்க திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத அனுபவம் ஏதாவது உண்டா..? சொல்லுங்க. பார்க்கலாம்..."

"அலுவலகத்தில சேல்ஸ் செக்ஷன் கிளார்க் லீவுல இருக்காள். நான் தற்காலிகமாய், அவள் வேலையைப் பார்க்கேன். முன்னால, ஒரு கம்பெனி கொடுக்க வேண்டிய பணத்தை 'ரைட் ஆப்' செய்திருந்ததை பார்க்கேன். அந்த கம்பெனி, இன்னொரு பேர்ல நல்ல முறையில இயங்கி வருவதை கண்டுபிடித்து எழுதுகிறேன்... ஒரு லட்ச ரூபாய் எங்க கம்பெனிக்கு வருது. மானேஜர் என் முதுகைத் தட்டிக் கொடுக்கார். என் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்குமுன்னு சொல்றார். கடைசில, அந்தப் பெண் கிளார்க்தான் அதைக் கண்டுபிடித்துப் பணத்தை மீட்டதாய் ரகசியமாய் எம்.டி.க்கு எழுதிடுறார். அந்தப் பெண் அவருக்கு உறவாம்... என்ன உறவோ... கடைசியில், அவளுக்கு சேல்ஸ் அஸிஸ்டெண்டாய் புரமோஷன் வருது. நான் அவளுக்குக் கீழேயே வேலை பார்க்கேன். அயோக்கியனுக்குக் கீழே வேலை பார்த்துடலாம். ஆனால், முட்டாளுக்குக் கீழே வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம். வாணியக்கா பெட்டிஷன் போடச் சொல்றாள். நான் மறுத்துடுறேன்..."

"சரி... ஆபீஸ் கிடக்கட்டும். கதை எழுதுறதுல கசப்பான அனுபவம் உண்டா..?”

"பல சிறுகதைகள் எழுதி அனுப்புறேன். எழுதுன வேகத்திலேயே திரும்பி வருது. இவ்வளவுக்கும் செக்ஸ் கதைகளாகத்தான் எழுதினேன். ஒரு கதையில், 'படுத்துக் கிடந்தாள். பார்க்க ரம்மியமாய் இருந்தது'ன்னு எழுதினேன். அது மட்டும் எப்படியோ ஒரு பத்திரிகையில பிரசுரமாச்சுது. மற்ற கதைங்க திரும்பி வருது. ஒரு நாவல் எழுதி, ஒரு சினிமாக் கம்பெனில கொடுக்கேன். பத்துநாள் கழித்து நாவலைத் திருப்பிக் கொடுக்காங்க. ஒரு வருஷம் கழித்து