பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

169

என் நாவலே சினிமாவா வருது... நான் எழுதுன வரிகளே வசனமாய் வருது... என் நாவல் என் பேரு இல்லாமலே சினிமாவா வருது... இன்னொருத்தர் பெயர்ல வருது. ..அந்தப் படத்துக்கு ஏதோ ஒரு அவார்டும் கிடைக்குது... பாவிப் பயலுங்க... என்னை ஏமாத்திட்டாங்க... மோசடி பண்ணிட்டாங்க... அவங்களை கொலை பண்ணுனால்தான் என் மனசு ஆறும்... ஜப்பான்காரன் மாதிரி... ரெண்டு கார்ல, ரெண்டு காலையும் கட்டி.."

"இப்போ உங்களுக்கு பதினைந்து வயது. படிக்கும் போதே அரசியல் மேடையில் பேசுறீங்க... அங்கேயாவது அங்கீகாரம் கிடைக்குதா..."

"ஹைஸ்கூலுல... பேச்சுப் போட்டியில முதல்ல வாரேன். மாவட்ட அளவுலேயும் முதல்ல வாரேன்... பலே பையான்னு சொல்றதுக்கு நாதியில்லாமல் போயிட்டோமேன்னு... வருத்தப்படுற சமயத்தில... ஒரு அரசியல் கட்சியில் பேசச் சொல்றாங்க... அது எனக்குப் பிடித்த கட்சி... பேசுறேன்; கைதட்டு வாங்கும்படியா பேசுறேன்... திடீர்னு அந்த வட்டாரத்துல... எங்க கட்சிக்கும், இன்னொரு கட்சிக்கும் கலவரம் மூளுது... நாலு கொலை விழுது. முதல் கொலையை செய்தது எங்க கட்சிதான்... எங்க உள்ளூர் தலைவர், நான், எங்க தொண்டர்களை உசுப்பி, ரத்தத்தை கொதிக்கும் படியாய் பேசச் சொல்றார். எனக்கு மனசாட்சி கேட்கல. நான் முடியாதுன்னு சொல்லிடுறேன்... அவரு... உடனே... 'போடா பொட்டை... பெரியவங்க பேச்சைக் கேட்டு அலுத்துப்போன பொதுமக்கள், சின்ன பையன்கள் பேச்சை மதிக்கிறதாலதான் உன்னை பேசச் சொன்னேன். எனக்கா ஆளில்ல'ன்னு சொல்லிட்டு பேச்சுப் போட்டில ரெண்டாவது பரிசு வாங்கின பையனை தயார் பண்ணுறார். அவனும், எங்க கட்சித் தொண்டர்களை, மேலும் ரெண்டு கொலை செய்யும்படி 'நல்லா' பேசுறான்... அப்பாவிங்க உயிருங்களை... வெளுத்து வாங்கிறான். அவன் இப்போ தலைவனாயிட்டான். நான் வெறும் கிளார்க். நானும்... மூணுகொலை விழும்படியா... பொய் பேச்சு பேசியிருந்தால்,

12