பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

வெளிச்சத்தை நோக்கி...


"இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எத்தனையோ ஞானிகளும், யோகிகளும், அறிஞர்களும், மனதின் நுட்பங்களையும், அது தறிகெட்டுப் போவதற்கான காரண காரியங்களையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்காங்க... இவங்களுக்கு சமூக அமைப்பும்... ஒருவனுடைய மனோ அமைப்புக்கு பெருங்காரணம் என்பது எப்படியோ தெரியாமல் போய்விட்டது. இதை முதன் முதலில் தத்துவார்த்தமாக எடுத்துச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ்... இன்னுங்கூட... ஒருவனுடைய மனோநிலைக்கு சமூகத்தின் அமைப்பும், அதனால் எழும் சமூகப் போக்கும் பெருங்காரணமாகிறது என்பதை மனோதத்துவ நிபுணர்களே மறந்து விடுகிறார்கள்."

"உங்களோட மனநோய்க்கு, நோய் கொண்ட இந்த சமூக அமைப்பும் முக்கியமான காரணம். இந்த சமூகம் சமதர்மப்படி இயங்கினால், பண்ணையார் அம்மா, ஒங்களை, அநியாயமாய் அடிக்கும்போது, ஏழைகள், பார்த்துக்கொண்டே சும்மா இருந்திருக்க மாட்டாங்க... விமலா மாதிரியான ஒரு அனாதைப் பெண்ணுக்கு உருப்படியான காப்பகம் இருந்திருந்தால், அவளும் ஒரு 'சேடிஸ்டாய்' மாறியிருக்கமாட்டாள். இப்போது நிலவும் வர்த்தகக் கலாச்சாரம் மட்டும் இல்லாதிருந்தால், வாணியும், போலித் தனமான கெளரவங்களையும், வாழ்க்கை முறையையும் காப்பாற்றுவதற்காக, மானேஜருக்கு இரையாகியிருக்க மாட்டாள். பெண்ணுக்கு சொத்துரிமையும், மறுமண உரிமையும் இருந்திருந்தால், உங்கள் அம்மா, தற்கொலை செய்திருக்க வேண்டியதில்லை... சத்யாவும், அண்ணனிடம் அடிபட்டு உங்கள் மனதையும் அடித்திருக்க முடியாது."

"மானேஜரும், மனோவியாதிக்காரனாய் இருக்கலாம். ஒருவேளை, தன் அம்மாவோ அல்லது மனைவியோ, தப்பு செய்வதைப் பார்த்து, அவர் வருத்தப்பட்டிருப்பார். அம்மா மீதோ மனைவி மீதோ ஆத்திரப்படமுடியாத நிலையில், ஒவ்வொருத்தியும், தன் அம்மா மாதிரி, மனைவி மாதிரி மோசந்தான்னு தன்னையறியாமலே நிரூபிக்க நினைத்து