பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

175

 இருக்கலாம். பார்த்திங்களா... போலித்தனமான சமூக அமைப்பில், ஒரு பெண்ணை 'அம்மா மாதிரி' என்ற நெறிக்குக்கூட வேற அர்த்தம் வந்துடுது... அந்த நெறிக்கே 'நெரி கட்டிடுது..."

"ஆனாலும், நீங்களும், உங்கள் நிலைமைக்கு ஒரு காரணந்தான். சமூகத்தின் அடித்தளத்தில் இருந்துவந்த நீங்கள், தெருவோர மக்களைப் பற்றி சிந்திக்காமலே, நடுத்தர வர்க்க மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து... அவங்களோட மட்டுமே ஐக்கியப்பட நினைத்திங்க... நீங்கள் போராட்டப் போக்குள்ளவர்தான்... ஆனால், தனிமனிதப் போராட்டம், சமூக இயக்கங்களுடன் இணையாதபோது, தத்துவார்த்த ரீதியில் பார்க்கப்படாதபோது, அது கூர் மழுங்கி, கடைசியில் மூளையையும் மழுங்க வைத்திடும். பிறகு, அதுவே விரக்தியாகி, போராட்டம், மனதுக்குள் வந்திடும். உதாரணமாய், வாணியோட பிரச்சினையை நீங்கள் சகாக்களிடம் சொல்லி, எல்லோருமாய் சேர்ந்து, மானேஜரைப் பார்த்து, எச்சரித்திருக்கலாம். இதனால... உங்களுக்குள் ஒரு சமூக உறவு ஏற்பட்டிருக்கும். மானேஜரும் திருந்துறதுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்."


'இன்னொன்று, நீங்க அயோக்கியனாகாமல் போனோமேன்னு வருத்தப்படுற யோக்கியன். அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனதுக்கு வருந்துறிங்க... மூணுகொலை விழக் காரணமாக இல்லாமல், எதிர்காலத்தை விட்டுக் கொடுத்த பெருமிதம் உங்களுக்கு ஏன் ஏற்படக் கூடாது? திலகர், வ.உ.சி. சுப்பிரமணிய சிவா நாட்டுக்காக எவ்வளவோ செய்தார்கள். அவங்க ஜெயிலில் இருந்து திரும்பும்போது, ஜனங்கள் அவர்களைப் பார்க்கவோ, அவங்க பேச்சைக் கேட்கவோ தயாராக இல்லை. இது நன்றிகெட்ட தனந்தான் என்றாலும், இது தவிர்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில், சமூகம், தனிமனிதனை சார்ந்து நிற்பதுபோல் தெரிந்தாலும், அது அப்படி நிற்பதல்ல... அந்த தனிமனிதனை உற்பத்தி செய்வதே சமூகந்தான்... வ.உ.சி.யை விடவா, நீங்க அரசியலில் தியாகம்