பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 வெளிச்சத்தை நோக்கி…


"நடக்கறது பொய்யாய் இருக்கணுமுன்னு நினைக்கிறே... அதனால அதைப் பார்த்தவரும், பொய்யனாய் ஒனக்குத் தெரியுது... பாஷ்யம் பார்த்ததையே நானும் பார்த்திருந்தாலும் என்னையும் இப்படித்தான் சொல்வே... ஏன்னா.... காதல் கண்ணையும் நட்பையும் மூடும்.... அதுலயும்... நடிக்கத் தெரிந்தவளோட காதல், நண்பனையும் துரோகியாய் காட்டும்... எனக்கு நீ நல்லாய் இருக்கணும் என்கிறதுதான். நிச்சயம் காலம் பதில் சொல்லும்..."

மெய்யப்பன், குமாரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டான். "என்னடா நீ... இப்படிப் பேசுறே... உன்னையா சந்தேகப்படுவேன்... அப்படிச் சந்தேகப்பட்டால் நான்தான் உருப்படுவேனா... ஒன்னைவிட எனக்கு யாரும் உசத்தி இல்லை... தெரிஞ்சுக்கடா..."

நண்பர்கள் இருவரும்,ஒருவர் உள்ளத்தில் இன்னொருவர் வியாபிக்க ஒரே மாதிரி நடந்தார்கள். சிறிது நேரத்தில் மெய்யப்பனின் உள்ளம் கனத்தது. ஆகாயத்துள் மறைவது போன்ற உணர்வு. பூமிக்குள் போனது போன்ற இருள் மயம். அந்தரத்தில் நிற்பது போன்ற வேரற்ற நிலை.

மெய்யப்பன் சுருண்டு விழப்போகிறவன் போல் நடந்தான்.