பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

வெளிச்சத்தை நோக்கி...



"சத்யா... ஒன்னைத்தான்... இப்படி வா... வாம்மா..."

அவள், அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே, தயங்கினாள்.

"வாரீயா... இல்ல... நான் வரணுமா..."

அவன் வரக்கூடாது என்பதற்காக வருபவள்போல், வந்தாள். அறைவாசலில் பாதியை அடைத்து நின்றாள்.

"நான் இன்னைக்கு காலி பண்ணப் போறேன் தெரியுமா..?"

தெரியும்' என்று அவள் வாய் பேசவில்லை. கண்கள், நீர்சிந்திப் பேசின.

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் சத்யா... இப்போ, ஒன் முடிவு தெரியணும்... உள்ளே வா..."

சத்யா, எதிர்வீட்டை எட்டிப் பார்த்தாள்.

"வாரீயா... கையைப் பிடித்து இழுத்து... உட்கார வைக்கணுமா..?"

சத்யா, கைகளைப் பின்புறமாக வைத்துக்கொண்டு, அவனைப் பார்த்தாள். எதிர்வீட்டைப் பார்த்தாள். மெய்யப்பனுக்கு என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. அவள் தோளைத் தொட்டு, கழுத்தைப் பிடித்து, உள்ளே இழுத்துவிட்டான். நடந்ததை நிராகரிப்பவள் போல நின்றவளின் தோளை அழுத்தி, நாற்காலியில் உட்கார வைத்தான். அவள் அவனை மெளனமாகப் பார்த்தாள். கண்கள் செருகுவதுபோல் பார்த்தாள். பிறகு, திடுக்கிட்டு எழுந்தாள். அவன் பார்வையின் பாவத்தைப் பார்த்து மீண்டும் உட்கார்ந்தாள்.

மெய்யப்பன், தழுதழுத்த குரலில் பேசினான்:

"என்னை புது மனிதனாய் உருவாக்கினதே நீ... நீ மட்டும் இல்லன்னா... இந்நேரம் என் எலும்புகூட சாம்பலாய் பூமியில்