பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

வெளிச்சத்தை நோக்கி...


சொல்லு... இதுதான் நம் கல்யாண மந்திரம்... சொல்லு... அட, சும்மா சொல்லும்மா... சொல்லும்மா... சொல்லு கண்ணு..."

சத்யா லேசாகச் சிரித்தபடித் தயங்குகிறாள். மெய்யப்பன் அவள் மோவாயை நிமிர்த்தியபடி, "நீ... சொல்லாட்டால், ஒனக்கு என்மேல் இஷ்டமில்லன்னு அர்த்தமாம்... சொன்னால் கோடி ஆசைன்னு அர்த்தமாம்... சொல்லும்மா... அட... சொல்லு கண்ணு... எனக்குப் பயப்பட்டாலும்... உம்... சொல்லு ராசாத்தி..."

சத்யா அவன் கையை லேசாகப் பிடித்துக் கொள்கிறாள். நாணம், பயத்தை விரட்டுகிறது. பாசம், நாணத்தை விரட்டுகிறது. பிறகு அதுவே உறுதியாகிறது. அதுவே வார்த்தைகளுக்கு உருவமாகிறது. செம்பருத்தி நிற உதடுகள் பிரிகின்றன. கண்கள் பிரகாசிக்கின்றன. வார்த்தைகள், தாமாக வருகின்றன.

“எதுக்குப் பயப்பட்டாலும், இந்த பயத்திற்கு மட்டும் பயப்படக்கூடாது..."