பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 வெளிச்சத்தை நோக்கி...

சொன்னவள் மாறியிருக்க முடியாது. இயல்பிலேயே சகஜமாகப் பழகும் தான், அலுவலகப் பெண் எவளிடமாவது சிரித்துப் பேசுவதைத் தப்பாக நினைத்திருக்கலாம்... ஒரு தடவை 'என்னைவிட... அந்த கனகம் தான் ஒங்களுக்கு உசத்தி என்று சொல்லவில்லையா? 'நான் அவளைக் கைவிட்டு விட்டதாக நினைத்திருக்கலாம். பேசித்தான் பார்க்கலாமே... நானே வலியப் பேசினேன் என்ற வெற்றிப் பெருமிதத்தை அவளுக்குக் கொடுக்கலாமே....'

அப்படியானால் குமார் சொன்னது? ஆனால் சொன்னபடி இருக்க வேண்டுமா என்ன? அதோடு அவன் சொன்னது உண்மை என்பது என்ன நிச்சயம்? உயிர் நண்பன் குமார் பொய் சொல்வானா... மாட்டான். ஆனால், அவனாகப் பார்க்கவில்லையே-பாஷ்யம் பார்த்ததாய் சொல்லியிருக்கார், அவ்வளவுதான். பாஷ்யம் பொறாமைக்கார கிழவன். ஒருவன், ஒருத்தியைக் காதலித்தால், கிழவன்கூடப் பொறாமைப் படுகிறான். தன்னோடு வேலை பார்க்கும் ஒரு சகா, தன்னைவிடப் பெரிய வீடு கட்டும்போதோ, ஒரு ஸ்கூட்டர் வாங்கும்போதோ, அல்லது தன்னைவிட ஆபீஸரிடம் நல்ல பெயர் வாங்கும்போதோ பொறாமைப்படாத'யோகிகள்கூட' யாராவது காதல் செய்வதைப் பார்த்துவிட்டால், வயிரெரிகிறார்கள். 'என் விமலாவிடம் இன்று பேசியாக வேண்டும். பேச முகம் கொடுக்காதவளிடம் பேசுவதா?... பேசித்தான் ஆக வேண்டும்'.

அலுவலக சகாக்கள் போய் விட்டார்கள். வாணி, மானேஜர் அறையில். இதுதான் சமயம்.

மெய்யப்பன் மனதில் எண்ணங்கள் புரையோடிக் கொண்டிருந்தபோது, விமலாவின் மேனி முழுவதும் மேக்கப் வகையறாக்கள் படர்ந்து கொண்டிருந்தன. லிப்ஸ்டிக்கை உதட்டில் உரசி விட்டாள். புருவத்திற்கு மை தானம் செய்துவிட்டாள். முன் தலையில் முடிச்சுகளை எடுத்து நெற்றியில் வளையமாகப் போட்டு முடித்து விட்டாள். காது ரிங்குகளை துடைத்துவிட்டுக் கொண்டாள். கைக்