பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்தரம் 31

எப்படி என்று புரியவில்லை. தன்னைச் சுற்றிய சூன்யத்தில் அவளும் சூன்யப்பட்டவள்போல் தெரிந்தது. கண்ணீரை, கண்கள் பார்த்தாலும், அதன் காரணம் கட்புலனுக்குள் போகவில்லை.

திடீரென்று துள்ளிக் குதித்து வெளியே ஓடினான். விமலாவின் உதாசீனப் போக்கின் காரணத்தை முழுக்க முழுக்கக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தோடு வெளியேறியவன், அலுவலகக் காம்பவுண்ட் சுவரைத் தாண்டியபோது, அவனைத் தாண்டி ஒரு ஸ்கூட்டர் போனதைப் பார்த்தான்.

முன்னிருக்கையில் யாரோ ஒரு ஜடாமுடி வாலிபன்... பின்னிருக்கையில் விமலா... அவன் தோளைப் பிடித்துக் கொண்டு, முதுகில் முகம் சாய்த்துப் போன விமலா...

அருகே இருந்த ஆட்டோ ரிக் ஷாவில் ஏறினான். டிரைவர் மீட்டரைப் போட்டுவிட்டு, அவனைக் கேள்வியோடு பார்த்தபோது, மெய்யப்பன், என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தான். "நேராப் போங்க..." என்று சொல்லிவிட்டு, அவன் குறுக்காகச் சாய்ந்தான்.

4

ஸ்கூட்டர்காரர், உழைப்பாளி சிலையருகே பிரேக் போட்டபோது, மெய்யப்பன் எழிலகத்திற் கருகே ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். பத்து ரூபாய் நோட்டை டிரைவரிடம் நீட்டிவிட்டு, அவர் சில்லறையைத் தேடிய போது, இவன் உழைப்பாளி சிலையருகே வந்து விட்டான். அந்த புதுஜோடி கடல் மண்ணில் கைகோர்த்து நடப்பது