பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 வெளிச்சத்தை நோக்கி...


"ஓ... அவனா... அவன் பேரு மெய்யப்பன். சரியான பித்துக்குளி; என்னைக் காதலிக்கறானாம்... கன்னா பின்னான்னு உளறுறான்."

"அவனைப் பார்த்தால் பித்துக்குளி மாதிரி தெரியலியே."

"அப்படின்னா... நான் பித்துக்குளியா?"

"என்ன இப்டிக் கோபப்படுறே?"

"பின்ன என்ன ரவி... பூடகமாய் பேசுறீங்களே... இதோ என்னைப் பாருங்க... நல்லாப் பாருங்க... இந்த முகத்துல இருக்கிற தவிப்பப் பாருங்க... நாம வருங்கால கணவன் மனைவி; நமக்குள்ளே உடம்பாலும், உள்ளத்தாலும் ஒளிவு மறைவு கூடாது. என்மேல சந்தேகம் வந்துட்டால், சொல்லுங்க... இப்பவே விலகிக்கிடலாம்... ஆனால், அப்போவும் நான் உங்களை மறக்க மாட்டேன். கழுத்துல சு ரு க் கு ப் போ ட் டா லும் போ டு வேனே த வி ர , இன்னொருத்தனை தாலிபோட விடமாட்டேன்... ஆனால் ஒரே ரிக்வெஸ்ட்... நான் இறந்துட்டாலும்... என் பிணத்தை நீங்கதான் தூக்கணும்... இன்னொருத்தர் கைபடக்கூடாது... நான் தமிழ்ப் பெண்... ஸார்..."

'அன்பு இருக்கிற இடத்துலதான் பொறாமை இருக்குமுன்னு ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது..? இனி மேல் அந்த பித்துக்குளி... ஒன்கிட்ட வாலாட்டினால் சொல்லு... என்கிட்ட ஆளுங்க இருக்கு... காலை மட்டும் எடுக்க ஒரு ரேட்... காலோடு கையையும் எடுக்க ஒரு ரேட்... என்ன சொல்ற..?"

"அய்யோ...எறும்பை மிதிச்சால்கூட... அழுகிற டைப் நான்...இந்த மாதிரியா பேசுறது...?இதுக்குத்தான்,நான் உங்ககிட்ட எனக்கு வேற கம்பெனிலே வேலை பாருங்கன்னு சொல்றேன்... அந்த ஆபீஸ்ல இருந்தால்தானே... அவன் முகத்துல விழிக்கணும்...? அந்த வேலை எப்போ கிடைக்கும் ரவி...”

"எந்த வேலை?”