பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(5)

 கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, முன் போர்ஷனில் இருந்த தன் அறையைத் திறந்து, கதவை உட்புறம் தாளிட மறந்தவனாய், விளக்குப்போட வேண்டும் என்று மறந்தவனாய், கட்டிலில் மல்லாந்து விழுந்தான். பழைய நினைவுகள், அவன்மேல் அப்புவது போல் பயங்காட்டின. உடனே அவன் குப்புறப் படுத்தான். கட்டில் விளிம்பில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, தரையைப் பார்த்தபோது, கொத்தி விட்டதுபோல் குண்டுங் குழியுமான ஒரு தரைப்பகுதி கண்ணில் தட்டியது.

நிலத்தைக் கொத்தினால் பயிர் விளையும்...மனதைக் கொத்தினால்... அவன் அவளை நினைவிலிருந்து ஒதுக்க முடியாமல்,அவளை நிந்திப்பதாய் நினைத்து, தன்னையே கொத்தி, தன்னையே தான் தின்று, தனக்குத்தானே அசைபோட்டுக் கொண்டான்.

கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, எப்படியோ சென்னைக்கு வந்து, ஒரு மளிகைக் கடையில் எடுபிடியாக வேலையில் சேர்ந்து, அருகே இருந்த டைப்ரைட்டிங் பயிற்சிக் கூடத்தில் ஒரு வருட காலம் பயின்று, கடை வாடிக்கையாளர் ஒருவரின் உதவியால் இந்த கம்பெனியில் சேர்ந்த பிறகு,அவன் பழையதை மறக்காமலும், புதுமையை மறுக்காமலும் வாழ்ந்தபோது, கம்பெனி சம்பந்தமாக புரசைவாக்கம் போனான். அப்போது, 'நீங்க... சிவகாமி பாட்டியோட பேரன்தானே..." என்று சொல்லிக் கொண்டே, இந்த விமலா குறுக்கே வந்து நின்றாள். அவன் அவளை ஆச்சரியமாகப் பாத்தபோது, "எனக்கும் ஒங்க ஊர்தான்... தெற்குத் தெருவுல 'காஞ்சான் முத்து'ன்னு சொல்லு வாங்கல்ல... அவரோட மகள்..." என்று சொல்லிவிட்டு, அவள் மலங்க மலங்க விழித்த போது, மெய்யப்பன் பள்ளிக்கூடத்தில் ஏனோ தானோவாகப் பார்த்திருந்த அந்தச் சிறுமியை, இவளுடன் ஒப்பிட்டுப்