பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 வெளிச்சத்தை நோக்கி...


பொருத்தம் பார்ப்பதுபோல் பார்த்தபோது, அவள் வாய் நிற்காது பேசிக்கொண்டு போனாள்.

சின்ன வயதிலே அம்மாவை இழந்த அவள், சித்திக்காரியின் கொடுமை தாங்க முடியாமல்,சென்னைக்கு ஓடி வந்தததையும், ஒரு வீட்டில் கெளரவ வேலைக் காரியாகப் பணியாற்றியதையும், பிறகு அங்கிருந்து வெளியேறி, லாட்டரி சீட்டுக்கள் விற்று வருவதையும் தெரியப்படுத்தினாள். அவள் அருகேயுள்ள ஒரு மேஜையில் விதவிதமான லாட்டரிச் சீட்டுக்களை அப்பப்போ பார்த்துக் கொண்டே பேசினாள். அவள் சொல்வதை இரக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த மெய்யப்பன், ‘என்னை ஒங்களுக்கு அடையாளம் தெரியல... ஆனால்...எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து உங்க முகம்...என் கண்ணுக்குள்ளேயே நிற்குது' என்று அவள் உருக்கமாகச் சொன்னபோது, அவள் கண்களை உற்று நோக்கினான். அவன் முகம் அவள் கண்ணுக்குள் நின்றது. அன்று நின்றது... இன்றுதான் போனது... கண்ணில் இருந்தல்ல... கண்ணோடு...

எஸ்.எஸ்.எல்.சி.தேறாதவளைப் பரீட்சை எழுதச் சொல்லி தேறவைத்தான்.அவ்வப்போது பணங்கொடுத்தான்.டைப்ரைட்டிங் கூடத்தில் படிக்கவைத்தான்.பிறகு தான் வேலை பார்த்த கம்பெனியிலேயே ஓய்வுபெறும் தருணத்தில் இருந்த மானேஜரின் கையில் காலில் விழுந்து, அவளை டைப்பிஸ்டாகச் சேர்த்தான்... மெய்(அப்படித்தான் அழைப்பாள்) ஒங்க அறைக்குப் பக்கத்திலேயே... எனக்கும் ஒரு அறை பாருங்க... ஒங்களை பார்க்காத சமயம், பயனில்லா சமயமாய் தோணுது' என்பது மாதிரி, அவள் 'டயலாக்' பேசியபோது, அவன் உள்ளூற மகிழ்ந்து போனாலும், அடையாறில் உள்ள ஒரு பெண் விடுதியில், அவளைச் சேர்த்தான். அவனுக்காக அவள் வழங்கிய அத்தனை சந்தர்ப்பங்களையும் அவன் விட்டுக் கொடுத்தான். அவளோ ஒரேயடியாக விட்டுவிட்டாள்.அவள் குழைந்தபோதும், சிணுங்கியபோதும், 'உங்களுக்கு வாணிதான் உசத்தி' என்று பொய்க்கோபம் கொண்டபோதும், அவன் ஆனந்த