பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40z வெளிச்சத்தை நோக்கி...


நாளும் கிண்டல் செய்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்து, அவனை முறைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தான்.

குமாரும் வந்துவிட்டான்.எப்போதும் வலியப் பேசும் அவனும்,அன்று அவனிடம் பேசவில்லை.பிணக்கு ஏற்படும் போதெல்லாம்கூட,முதலில் பேசும் அவன்கூட, ஒரேயடியாய் கணக்கை முடித்துக் கொண்டவன் போல்,அவனை ஏறிட்டுப் பார்க்க வில்லை. 'என்ன தம்பி... உடம்பு ஏன் இளைச்சிருக்கு' என்ற வார்த்தையையே குட்மார்னிங்கிற்குப் பதிலாகப் போடும் வாணியும், அவனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

விமலா, அரைமணி நேரம் தாமதமாக வந்தாள். வரும்போதே "எனக்கு ஏதும் போன் வந்ததா”என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அவள் வருவது வரைக்கும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு,ஏதோ எழுதிக் கொண்டி ருந்தவனுக்கு, அவளைப் பார்த்ததும், இதயம் அடித்துக் கொண்டது. மூச்சு மூக்கிற்கு வராமல், வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தாபம். எதையோ ஒன்றைப் பறிகொடுத்த ஏக்கம். பைத்தியக்காரனாக்கியவளைப் பக்கத்திலேயே பார்க்க வேண்டிய தலைவிதி ஏற்பட்டதைச் சுமக்க முடியாத தவிப்பு...கொலையைவிட,தற்கொலையே சாலச் சிறந்தது என்ற சுய இரக்கம்.

ஆனால், விமலாவோ சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தாள். மத்தியானத்திற்குள் இரண்டு டெலிபோன் கால்கள் வந்தன. டெலிபோன் குமிழை உதடோடு வைத்துக்கொண்டு, தான் பேசுவது பிறர்க்குக் கேட்கக்கூடாது என்பதுபோல், இடது கையை காதோரம் வைத்து மறைத்து, வலது கையை மூக்கோடு சேர்த்து அனைத்து,அவள் பேசுவதுபோல் கொஞ்சினாள். கொஞ்சுவதுபோல் பேசினாள். தலையைக் கவிழ்த்து, தன்னைக் கவிழ்த்துக் கொண்ட மெய்யப்பன், தற்செயலாக ஏறிட்டுப் பார்த்த