பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 வெளிச்சத்தை நோக்கி...


பெண்டாட்டியை இன்னொருத்தன் இப்படிக் கூப்பிட்டால் சம்மதிப்பீங்களா?... ஒங்களை மாதிரி ஆட்கள், சம்மதித்தாலும் சம்மதிப்பிங்க..."

மானேஜருக்கு, தன் மனைவியைச் சொன்னதும், ரத்தம் கொதித்தது. அவரே அப்படிச் சந்தேகப்படும்படி அந்த அம்மா இசகு பிசகாக நடந்ததுபோல் தோன்றிய சந்தர்ப்பங்களை நினைவுபடுத்திப் பார்த்தபோது, அவருக்கு வாணி மறைந்து, மனைவி மட்டுமே மனதில் நின்றாள். அதுவும், கோரமாக, சந்தேகத்திற்கு உட்பட்டவளாக, ஆகையால் அவர் ஆத்திரத்தில் கத்தினார்.

"யூ ஸ்டுபிட்... கெட் அவுட்... ஐ... ஜே... யூ... கெட் அவுட்."

மெய்யப்பன் பதிலுக்குக் கத்தினான்.

"வார்த்தைய அளந்து பேசுங்க ஸார். 'டா' போட எனக்கு அதிக நேரம் ஆகாது... வாணியக்காவை எதுக்காக சினிமாவுக்குக் கூப்பிட்டே..."

"பெர்ஸனல் சமாச்சாரத்தை கேட்க நீ யார்?"

“எதுய்யா பெர்ஸனல் சமாச்சாரம்...? அதிகாரம் என்கிறது பணக்காரனிடம் இருக்கிற பணம் மாதிரி. குறைந்த பட்சம் தர்மகர்த்தா முறையிலயாவது அது செயல்படனும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யுறவனை என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் தெரியுமா..."

"மெய்யப்பன்... இது சஸ்பெண்ட்ல போய் முடியும்..."

"அது தெரிஞ்சுத்தான் பேசுறேன்... உங்களால என்னை பதவியில இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியும். ஆனால், என்னால் உங்களை இந்த உலகத்தல இருந்தே டிஸ்மிஸ் செய்ய முடியும்."

"ஏன்... மிஸ்டர்..? சம்பந்தா சம்பந்தமில்லாம..."

"பொதுப்பிரச்சினையை... ஒவ்வோருவனும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாததாய் நினைக்கதாலதான்... இப்போ