பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 49

பொதுப்பிரச்சினையே ஒவ்வொருவனுக்கும் சொந்தப் பிரச்சினையாய் ஆகிற அளவுக்கு வளந்துட்டு... தெரியாமத்தான் கேட்குறேன், ஒங்களுக்கும் பெண்டாட்டி இருக்குது... நீங்களும் பழைய அஸிஸ்டெண்ட் மானேஜர் மாதிரி ஐந்து நிமிடத்துல போயிடலாம். ஒங்க ஒய்பும் வாணியக்கா மாதிரி வேலைக்குப் போக வேண்டிய நிலைமை வந்து, யாரோ ஒருத்தன் சினிமாவுக்கோ அல்லது..."

மானேஜரால் தாள முடியவில்லை. அந்தக் 'கோவலன்', மேற்கொண்டு கேட்க விரும்பாததுபோல், வாயில் வார்த்தைகள் வராது, அவனைப் பேச்சை நிறுத்தச் சொல்லி கையைக் காலை ஆட்டியபோது, மெய்யப்பன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான்.

"வாணியக்கா... எப்படி வாழ்ந்தவள்னு ஒங்களுக்குத் தெரியும்... இன்னும் சொல்லப்போனால், இது வாணியக்கா வோட பிரச்சினை இல்ல. ஒரு பெண்ணோட பிரச்சினை... இன்றைய பொருளாதாரச் சுமையில... படித்த பெண். வேலைக்குப் போக வேண்டியதாய் இருக்கு... வீட்ல புருஷன் திட்டுறதக்கூட பொறுக்க முடியாமல் எதிர்த்துப் பேசுற பெண் கூட, அலுவலகத்தில் அதிகாரி திட்டுறதையும் சகிக்கிறாள் என்றால், அவளுக்கு மானப் பிரச்சினையோடு வயிற்றுப் பிரச்சினையும் இருக்கறதுதான் காரணம். வயிற்றுக்காக, வாயையும், காதையும் மூடுற பெண்களை அதிகாரத்தை வைத்து சூறையாட நினைக்கலாமா... இப்போ உங்களை உதைக்கிறதுக்கு எவ்வளவு நேரமாகும்?"

"ஓ மை காட் வாட் ஈஸ் திஸ் மெய்யப்பன்...?" பிளீஸ் போயிடுங்க... நீங்க தாக்கினால்... நான் தாங்க முடியாதுதான்."

"அதைத்தான் சார் நானும் சொல்றேன். இப்போ கதவை மூடிக்கிட்டு, ஒங்களை ஊமைக் காயமாய் ஒதைச்சால் கேட்கிறதுக்கு நாதி கிடையாது... உங்களைவிட நான் வலுவானவன். என்னால உதைக்கவும் முடியும். அப்படி நான் செய்தால், அது, உடல் துஷ்பிரயோகம் இல்லையா? இது மாதிரிதானே வாணியக்கா நிலைமையும்? வயிற்றுக்காக

4