பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

61


பழக்கமில்ல... அவரோட அண்ணன் தம்பிங்க... என் சொத்தைப் பறிச்சுட்டாங்க... அவருகிட்ட கடன் வாங்குனவங்க..."

"ஓங்க பெர்சனல் சமாச்சாரம் எனக்கு எதுக்கும்மா...? வீடுன்னா ஆயிரம் இருக்கும். இது ஆபீஸ். அந்த ஃபைலைப் பற்றி மட்டும் பேசுங்க... கடைசியாய் கேட்கிறேன். ஃபைலை "டிரேஸ்' செய்து தர முடியுமா? தர முடியாதா?”

மேஜைமேல் ஒரு சொட்டுக் கண்ணீர் பதிலாக வந்து விழுந்தது. மானேஜர் அதட்டலுக்கு மேல் அதட்டலாகக் கேட்டார்.

"ஆல்ரைட்... ஒங்களால இனிமேல் அந்த ஃபைலைக் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை. ஏன் கொடுக்க முடியாது என்கிறது எனக்கும் தெரியும். சிவராம் கம்பெனிக்காரங்ககிட்ட 'ரேட்' பேசிட்டு கொடுத்திருப்பீங்க... அவங்க ஃபைலை, நகலெடுத்துட்டு தரதாய்ச் சொல்லி,வாங்கிட்டுப் போயிருப்பாங்க...சரி.ஒங்களுக்குன்னு பேசின பணத்தையாவது தந்தாங்களா? ஏம்மா கண்ணீர் விடுறீங்க... இந்த ஃபைலுங்க நனையுது பாருங்க... நீங்க போகலாம்... அரைமணி நேரம் கழித்து அக்கெளண்டன்டைப் பார்த்து ஒங்க கணக்கை 'செட்டில்' பண்ணுங்கோ... அப்புறமாய் இங்கே வந்து டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக்கோங்கோ, இப்போ, நீங்கே போகலாம். ஐ ஆம் பிஸி."

மானேஜர், இண்டர்காமில் ஒரு பட்டனை அழுத்தி, 'அக்கெளண்டன் ' என்றபோது, வாணி அவரது இரண்டு கைகளையும் எதேச்சையாகப் பிடித்துக் கொண்டு விம்மினாள்.மானேஜர் அந்த ஸ்பரிச இன்பத்தில் ஏற்பட்டகிறக்கத்தை அடக்கிக் கொண்டே, 'என்னை ஏம்மா தொடுறீங்க...? நீங்க கண்ணகி பரம்பரையாச்சே' என்று சொன்னபோதுதான் அவளுக்குச் சுயச் செயல் நினைவுக்கு வந்தது. ஏந்திய அவரது கைகளை படபடப்புடன் போட்டுவிட்டு, சிறிது விலகி நின்றபடி, கையெடுத்துக்