பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 வெளிச்சத்தை நோக்கி...

வாணி முனங்கினாள். நடுக்கத்தோடு முனங்கினாள். முகத்தைக் கரங்களால் மூடிக் கொண்டே பிதற்றுவது போல் பேசினாள்.

"அந்தப் ஃபைல் கிடைக்காது சார்... என்னோட ராசியே அப்படித்தான் ஸார். நான்,எது எதையெல்லாம் பாதுகாத்துக் கணுமுன்னு நினைக்கேனோ, அதெல்லாம் பறிபோயிடும் சார்."

மானேஜர், அவளுக்கு ஆறுதல் சொல்பவர்போல், அவள் கழுத்தை வருடிவிட்டபடி, "சரி,என்னைப் பாரு... வெட்கமா இருக்கா...?” என்றார்.

வாணி, வெட்கப்பட வேண்டியதில்லை என்பதுபோல, வெறுமையாகச் சிரிக்கிறாள்;பொறுமையாக நிற்கிறாள். ஆசைக்கு வெட்கம் இல்லை என்பார்கள். வறுமைக்கு மட்டும் என்ன வெட்கம் வாழுது?

(9)

என்னதான் விமலாவை உதறிவிட்டதாக நினைத்தாலும், அவளைப் பற்றிய நினைவுச் சுவடுகள் அழிந்துவிட்டதாகப் பாவனை செய்தாலும், மெய்யப்பனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சு கனத்து, தலை கொதித்து, கண்கள் எரிந்தன.முந்தாநாள்...அந்த ரவி அலுவலகத்திற்கு வந்து, மானேஜரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, விமலாவை 'கையோடு' கூட்டிக் கொண்டுபோனான். ஆம். அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு போனான். வாணியக்கா கூட, அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க மறுக்கிறாள். அவன்,