பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 வெளிச்சத்தை நோக்கி...


அசுத்தமான உணர்வையும் மீறிச் சாப்பிட்டான். தாங்க முடியாத தாகம் வரும்போது அக்கினித் திராவகமாய் இருந்தாலும் கவலையில்லை என்பதுபோல் தண்ணீர் குடித்தான். தப்பலாம் என்ற நம்பிக்கை தப்பிவிட்டது. இறப்பதுதான் ஒரேவழி என்பதுபோல் நாட்களை எண்ணிப் பார்த்தான்.

குமார் சொன்னதுபோல் அவன் டாக்டரைப் பார்க்கத் தான்செய்தான்.அந்தஆசாமி,அவன் சொல்வதையெல்லாம் நிதானமாகக் கேட்காமலே, அவன் பாதி சொல்லி முடிக்கும் முன்னாலேயே சீட்டெழுதினார். வெளியே ஏகப்பட்ட கூட்டம் காத்திருப்பதையே மருத்துவத்தில் தான் செய்த மகத்தான சாதனையாகக் கருதிய அந்த டாக்டர் - யாரோ ஒரு அரசியல்வாதி அல்லது பெரிய அதிகாரியின் சிபார்சில், மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து, டாக்டர் பட்டம் வாங்கியிருக்கவேண்டும். இல்லையானால், முகத்தில் அவ்வளவு அலட்சியம் இருந்திருக்காது. அவன் சொன்னதைப் பரிகசிப்பதுபோல், சிரித்துக் கொண்டு கேட்டிருக்கமாட்டார். ஆளுக்கு மூன்று நிமிடப் பார்வையில் ஐந்து ரூபாய் மொய் வாங்கும் அவருக்கு, வெளியே ஐம்பது பேர் காத்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால், அவனைப் பார்த்ததும் 'வித்தியாசமான நோயாய் இருக்கே... ஸ்டடி பண்ண வேண்டிய கேஸாயிற்றே 'என்று அவருக்கு, மனிதாபிமானம் கிடக்கட்டும், குறைந்த பட்சம் தொழிலபிமானம்கூட வரவில்லை. அவன் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, ஐந்து ரூபாய்க்கு மருந்துக் கடையில் கிடைக்கக்கூடிய மாத்திரைகளைத்தான் வாங்கிக் கொண்டு வந்தான். அந்த மாத்திரைகளையும், வெளியில் எவரும் அடையாளம் கண்டு விலையைக் கண்டுபிடிக்கக்கூடாது என்பதுபோல், கொடுத்த மாத்திரைகளைப் பொடிப் பொடியாக்கி, பொட்டலங்களாக மடித்துக் கொடுத்தார். மருத்துவத்தின் நுட்பங்களைக் பொடிப்பொடியாக்கிப் கரைத்துக் குடிக்கத் தெரியவில்லை யானாலும், மாத்திரை களையாவது பொடியாக்கத் தெரிந்ததே..... அவனை அப்புறம்