பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 89


வாருங்கள் என்றுகூட அவர் சொல்லவில்லை. ஐம்பதில் ஒன்று குறைந்தால் என்ன....?

மெய்யப்பன் மருந்தைச் சாப்பிட்டான். ஏற்கெனவே உணவு சாப்பிடாமல் இருந்ததால், மருந்தைப் போட்டு நீரைக் குடித்த மறு நிமிடம் வாந்தியெடுத்தான். இதனால் உடல் பலவீனமாகி, பயமுறுத்தும் எண்ணங்கள் பலத்ததுதான் மிச்சம்.

சினிமாவுக்குப் போனால் ஒருவேளை சரியாகும் என்றுஎண்ணி,தியேட்டருக்குப் போனான். துரதிருஷ்டவசமாக, அது சண்டைப்படம். இன்றைய சினிமா வழக்கப்படி, கதாநாயகன் வில்லனிடம் செமத்தையாக உதை வாங்கினான். அந்தக் காட்சியை அவன் பார்த்ததும், மானேஜர் அவனைப் புரட்டிப் புரட்டி உதைப்பது போன்ற ஒரு பிரமை. உதைபடுபவன்போல், இருக்கையில் அங்குமிங்குமாக நெளிந்தான். பிறகு, இருக்க மனமில்லாமல் வெளியேறினான்.

அலுவலகத்தில் நிலைமை இன்னும் மோசம்.விமலாவிடம்சுயமரியாதையுடன் இருப்பதற்குப் பதிலாக, அவள் பச்சாதாபத்திற்கு இரங்குபவன்போல் அவளைப் பார்த்தான். வாணியாவது, தனது புதிய உறவால்தான், அவன் மாறிப்போய்விட்டான் என்று நினைத்தாள். வீட்டில், அவன் சுகமாக வேண்டும் என்று சாமிகூட கும்பிட்டாள். ஆனால், விமலாவோ நல்லவேளை, இந்தப் பைத்தியத்திடமிருந்து தப்பித்தோம் என்பதுபோல் தன் அறிவை மெச்சிக் கொண்டாள்.

அலுவலகத்தில், பிரமை வந்த இரண்டாவது நாள், அவன் அரை நாள் விடுப்பில் போனான் அல்லவா? குத்துக்கல் மாதிரி தான் உள்ளே இருக்கும்போது, மெய்யப்பன் சொல்லாமல் கொள்ளாமல் போனதில், மானேஜர் கோபப்படுவதற்குப் பதிலாகப் பயப்பட்டார். இன்னும் எப்படியெப்படி எல்லாம் அலட்சியப்படுத்தப் போகிறானோ என்பதுபோல் அஞ்சினார் மறுநாள்