பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 93

பாஷ்யமும் மெய்யப்பனும் வெளியேறியபோது, விமலா, அவன் தன்னைப் பற்றித்தான் அவரிடம் ஏதோ சொல்லப் போவதாக நினைத்து, கருவிக் கொண்டாள். ரவிகிட்ட சொல்லி, இவனோட கையக் கால எடுக்கணும்.... இல்லன்னா... வாயையாவது கிழிக்கச் சொல்லணும்.

மெய்யப்பன், பாஷ்யத்திடம் மனமுருக, மெய்யுருக தனது அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லும்போது, இடையிடையே போய் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "என்னப்பா... புது பேண்டா... என்னம்மா, ஒன்வீட்டு வாத்தியார் எப்டி இருக்கான்... பாஷ்யம். பிறகு, மெய்யப்பனைப் பார்த்து, "உம்... சொல்... எதுல விட்டே?” என்று சொல்லிக் கொண்டே, "வர வர பாக்கும் சரியில்ல... புகையிலயும் சரியில்ல..." என்று பதிலளித்துக் கொண்டார்.

மெய்யப்பனுக்கு, அந்தச் சூழலில், அந்தக் கொள்ளிக் கட்டையைக் தலையில் சொறிந்து கொள்வதன் உஷ்ணம் தெரியவில்லை. எல்லாவற்றையும் ஒப்பித்தான். பாஷ்யம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "எதுக்கும் ஒரு தாயத்து போட்டுப்பாரு... சரி... நீ போ... நான் டி.பி.ஐ. ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வாரேன். என் ஃபிரண்ட் டாட்டருக்கு சீமந்தம் எப்போன்னு கேட்டுட்டு வரணுமுன்னு ஆத்துல ஒரு கட்டளை..." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மெய்யப்பன் அலுவலகம் வந்தான். பாஷ்யத்திடம் பேசியது சற்று ஆறுதலைக் கொடுத்தது. தாயத்துப் போட்டால் சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. மானேஜர், வாணியைத் தன் அறையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே வந்து "மெய்யப்பன், சரக்கு வந்துட்டாம்... ஸ்டேஷனுக்குப் போய்... கிளியரிங்