பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 97

ஸ்டாண்ட்ல எவனோ தினமும் 'பாலோ' பண்றான்னு சொன்னே... ஞாபகம் இருக்கா... ஒன் காதலன் சந்தானம் நழுவிவிட்டான். நான் ஒன் கூட வந்து, பாலோ பண்ணுனவனை சட்டைக் காலரை பிடித்து, ஒன்கிட்ட மன்னிப்பு கேட்க வச்சேனே.... அப்படிப்பட்ட என்னையாம்மா பரிகாசம் செய்யுறே... செய்மா.... நல்லா செய்...'

'அடேய் சற்குணம்.... நீ ஆபீஸ் பணத்தைக் கையாடுனபோது, 'அவரு கையாடல... டூர் அட்வான்ஸுக்கும், பர்சேஸ் அட்வான்ஸுக்கும் என்கிட்ட ஆயிரம் ரூபாய் தந்தார். நான் தான் வவுச்சர் கொடுக்க மறந்துட்டேன்'னு சொன்னேன். நீ சஸ்பெண்டாகாமல் தப்பிச்சது ஞாபகம் இருக்காடா... என்னை ஏளனம் செய்யறவங்களை ஏளனம் செய்ய வேண்டிய நீ, 'ஏன் ஸார் இப்டி இருக்கேன்'னு கேட்க வேண்டிய நீயாடா... மற்றவங்ககூட சேர்ந்து சிரிக்கிறே... நீ அழும்போது, அழுதவனைப் பார்த்தாடா சிரித்தே... சிரிக்கிறவனைப் பார்த்து அழுகிறவனாவது தப்பிக்கலாம். ஆனால், அழுகிறவனைப் பார்த்து சிரிக்கிறவன் தப்பிக்க முடியாதுடா...'

நேரம் ஒடிக் கொண்டிருக்கிறது. மெய்யப்பனுக்கு இன்னொரு சிந்தனை,

விமலா உண்மையிலேயே தனக்காக வருத்தப்படுவதாக அவன் நினைத்துக் கொண்டான். ரவியுடன் 'ஊடல்' பட்டு, அவள், தன் முகத்தை உம்மணாம் மூஞ்சியாக வைத்திருப்பதைக்கூட, அவள், தன் நிலைமைக்கு வருந்தித் தான் அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டான். என்ன இருந்தாலும், மூன்று வருடப் பழக்கமாச்சே... அன்னியோன் யமாய் இருந்த நட்பாயிற்றே... காதல் போனாலும் நட்பு போகுமா.... அவள், ஒரு தடவை அடிபட்டு, படுக்கையில் கிடந்தபோது எப்படி துடிச்சிருக்கேன்..... உங்களுக்காகவாவது நான் சீக்கிரமாய் குணமாயிடணும்' என்று தழுதழுத்த

7