பக்கம்:வைணமும் தமிழும்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வைணவமும் தமிழும்


‘ஓம் நமோ'; ‘நாராயணாய என்ற மூன்று பதங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் ‘ஓம்’ என்ற பதத்தின் பொருளையே நம நாராயணாய என்னும் மற்ற இருபதங்களும் நன்கு விரிவுபடுத்துகின்றன. இவ்விரு பதங்களின் பொருளையே துவயம் விரிக்கின்றது. துவயத்தின் பொருளையே ‘சரமசுலோகம் மேலும் விரிக்கின்றது. இதனாலும் திருமந்திரத்தின் முதன்மை விளங்குகின்றதன்றோ? மேலும், இத்திருமந்திரம் முக்கியமாக அர்த்தபஞ்சக ஞானத்தையும், நவவித சம்பந்தஞானத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது[1] மேற்குறிப்பிட்ட மூன்றிலும் ‘ஓம்’ என்ற பிரணவம் சேதநனுடைய சேஷத்துவத்தையும்[2] நமஸ் என்ற நடுப்பதம் ஈசுவரனுடைய பாரதந்திரியத்தையும்[3],'நாராயணாய என்பது சேதநன் ஈசுவரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்[4]தெரிவிப்பனவாகும்.

‘ஓம்’ என்ற பிரணவம் இரண்டுநிலைகளைக் கொண்டது. சேர்ந்திருக்கும் நிலையில் ஒர் எழுத்தை யுடையது; பிரிந்திருக்கும் நிலையில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது. இம்மூன்று எழுத்துகளும் மூன்று பதங்களாய் மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். அகாரம் பகவானையும்


  1. 3. இவற்றின் விளக்கம் வேறோர் இடத்தில் தரப்பெற்றுள்ளது.
  2. 4. சேஷத்துவம்- பிறருக்கு (ஈசுவரனுக்கு) அடிமையாயிருத்தல் என்பது பொருள்.
  3. 5. பாரதந்திரியம்-பரனுக்கு (பகவானுக்கு) அடிமை என்பது பொருள்.
  4. 6. கைங்கரியம்:(கிங்கரன்-வேலையாள்) அவன் செய்யும் தொழில் கைங்கரியம். அதாவது அடிமைத்தொழில், இதனைச் சேதநன் ஈசுவரனுக்குச் செய்வது ஈசுவரனுடைய முக உல்லாசத்தின் பொருட்டு