பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ. கூடற்புராணம்


தஞ்சையும் உறந்தையும்
கடங்கடற் கலிங்கமும்
வஞ்சியும் குடக்கொடே
வடக்குமவந் தெதிர்ப்பினும்
விஞ்சு காலி னாலுடைந்த
பஞ்சுபோலும் வெள்கணை
அஞ்சினா லுடைந்தபேதை
நெஞ்சுபோலு மாகுமே.

என்பது. பாஞ்சராத்திரியரைச் சொல்லி அடுத்த பாடலில்'கிழியறுத்த பட்டனார் குலத்துலோர்வைகானசர் வழிவழி தொடர்ச்சியாக வாழும் வீதி' என்கின்றார். பாடல்களின் வகையும், கழங்கு அம்மானைப் பந்தடியும்;

ஒருமுறை கேட்ட பாட்டும்
எழுத்தொளித் தோது பாட்டும்
பொருள்நிலை கரந்த பாட்டும்
கணக்குமைந் தங்கப் போக்கும்
வருபல வினாவும் கூறி
மன்னரார் புகழும் வாணர்
தெரிவையர் கழங்கம் மானை
பந்தடித் தொகையும் தேர்வாம்.

புலவோர் பூவாளத்தாற் பள்ளியுணர்த்துகிறார்கள். மக்கள் உண்ணிர் வம்மென்றெறி மணியொற்றி உணவூட்டுகிறார்கள்.

முதலாவது கிருத காண்டம். நைமிச முனிவர்கள் 'மதுரை மான்மியம்' கூறு என்று வியாழனை வினவுகிறார்கள். 'புலன்கள் அயல் போக்காது எண்ணி எழுதும் ஒவியம் போல் இருந்து கேண்மின்' என்று அவன் கூறுகின்றான்.இங்கு பல இடங்களில் சொல்லமைப்பும், வாக்கிய அமைப்பும் வடமொழியமைப்பாக இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு: 'நும்மால் நன்றாய்க் கேட்கப்பட்டேன் நான்; நோன்பாற்றும் உம்மால் இந்நூலை கேட்பதனுக்குண்டதிகாரம்'.இங்கு

83