பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


இயற்கை வருணனை அதிகம். தென்றலானது குருகையின் மாறற்கு ஆம் இது எனும்படி குளிர்கின்றது. பாண்டி நாட்டில் இந்நகரில் ஈசனுக்கும் இமய மகளுக்கும் தாம் மணம் முடிப்பதற்காக வந்த செய்தியைத் திருமால் உணர்த்துகின்றார். திருமணம் நிகழ்கின்றது. காசியன் சக்கர தீர்த்தக் கரையில் தவம் புரிகின்றான். நான்கு பாடல்களில் துதிக்கின்றான்.

பேரா யிரமோ பிரமமோ எவ்வெவைக்கும்
வேராய காரணமோ மேனித் தனிப்பொருளோ
பாரா யணமறைகள் பார்த்துணரும் தொல்லுருவோ
நாரா யணவோ நமோநமோஉன் னடிக்கே.

என்பது ஒரு பாடல். பின்னும் பல பாடல்கள் சமயப் பொருள்களை நுவல்கின்றன. காசிபனுக்கு மக்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் அலைவின்மையும் திருமால் அருளுகின்றார்.

இரண்டாவது திரேத காண்டம். பிருது சக்கரவர்த்தி பூசித்து வரம் பெறுகின்றான். அடுத்த'காலநேமி வதைப் படலத்தில், திருமால் அந்த அசுரனைத் தொலைத்த செய்தியைக் கூறும்போது சிறு போர் வருணனையும் காண்கின்றோம்.

மூன்றாவது துவாபர காண்டத்தில், முதலில்’அத்திரிப் படலம்'; அதில் யானை மலைக் கதை. இம்மலையில் உரோமச முனிவன் முன் தோன்றிய நரசிங்கத்தின் உக்கிரம் தணியாமையால், தேவர் சரப மூர்த்தியை ஏவி உக்கிரம் தணிக்குமாறு செய்ய, நரசிங்கம் சரபத்தை வென்று பின் தானே சாந்தமடைந்தது. அடுத்தது'அம்பரிடப் படலம்; அம்பரீடன் மதுராபுரியில் வந்து திருமாலைப் பணிந்து முக்தி பெறுகிறான். இங்கு அவன் கண்ட நகர வருணனை 18 பாடல்கள்; புனல் விளையாட்டு 45 பாடல்கள்.

நான்காவது கலி காண்டம், முதலாவது 'உருவசி சாப நீங்கு படலம்'. தேவ சபையில் உருவசி சாபம்பெற்றுப் பூவுலகடைந்து புரூரவனை மணந்து வாழ்ந்து பின் சாபம் நீங்கித் தேவருலகடைதல். இரண்டாவது மலையத்துவசன் தவம் செய்து தடாதகைப் பிராட்டியைப் பெண்ணாகப் பெறுதல். பின் தடாகை அரசாள, மலையத்துவசன் முக்தி பெறுதல். மூன்றாவது சீவல்லப பாண்டியன் ஆட்சியால், செல்வ

84