பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ .இருசமய விளக்கம்


நம்பியைப் பீடத்திருத்தி, பொற்கிழி தூக்கி, பெரும் பொருள் தத்துவத்தை உணர்ந்து வருபவருக்குக் கிழி வழங்குதல் எனத் திட்டமிடுதல். சீவில்லிபுத்தூர் பட்டாசாரியன் விண்டுசித்தன் மெய்ப்பொருள் உணர்தல் வேண்டி மதுரைக்கு வருதல். அந்த பட்டாசாரியன் மதுரையடைந்து பல்லாண்டு பாடி மெய்ப்பொருள் நிறுவிப் பொற்கிழி பெறுதல்’[1], பல்லாண்டு கூறுமிடத்து, நூலாசிரியர் பட்டர்பிரான் கூற்றாக மூன்று பல்லாண்டு பாடல்களைப் பாடியுள்ளார். பின்வரும்,

பல்லாண் டிலங்கு மணத்திண்தோள்
மாயா, தூய பரமேட்டி
தொல்லாண் டிருந்த குடியடியோம்
உன்னோடு யாமும், தொழுதொழும்பும்,
எல்லாந் தருமுன் திருவடிகள்
இரண்டும், பண்டை எமதுணர்வும்,
பல்லாண் டுழி பல்லாண்டு
பலகால் நூறா யிடத்தாண்டே

என்ற பாடல் அவற்றுள் ஒன்றாகும்.

(5) இரு சமய விளக்கம்

திருமால் சமயத்தை உயர்த்திப் பேசும் இந்தப் பெருநூலைச் செய்தவர் அரிதாசர் என்ற புலவர்.இவர் வரலாறும் பிற செய்திகளும் அறிவதற்கு ஆதாரங்கள் பல உள்ளன.


  1. 29 இந்த வரலாறு பெரியாழ்வார் வாழ்க்கையில் மாறி வழங்குகின்றது. இறையருளால் பாண்டித்தியம் பெற்று திருமாலே பரம்பொருள் என்றுநிறுவி பொற்கிழி பெறுகின்றார். அரசன் அவரைப்பட்டத்து யானையின் மீது ஏற்றி நகரத்தில் பவனி வரச் செய்து பாராட்டை வழங்குகின்றான்.இக்காட்சியைக் காண்பதற்காகத் திருமால் கருடன் மீதேறி பெரிய பிராட்டியுடன் காட்சி தருகின்றார். இக்காட்சியைக் கண்ணுறும் மக்களில் சிலர் கண்ணெச்சில் படும் என்று பல்லாண்டு பாடியதாக (ஒரு பதிகம்) வரலாறு

85