பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இரிசமய விளக்கம்


கன்னடக் கல்வெட்டு கூறுகின்றது. சகாத்தம் (1445)இல் சுயாது வருடம், கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, சுக்கில பட்சம் உத்தானத்துவாதசியில் துக்கபத்ராதீரத்து ஹேதுகூட பர்வதத்தால் அலங்கரிக்கப்பட்ட ரீவிட்டலேச விருபாட்சர் சந்நிதியில் ஹரிவாசபுரேசராய் வேதாசலத்தில் எழுந்தருளியிருக்கும் ரீநீல மாணிக்கத் தேவருக்கு சந்திரகிரி இராச்சியத்தில் கங்கை மரபில் பிறந்தவரும், திருமாலின் திருவடிகளில் வண்டு போன்றவரும், நீலமாணிக்கத் தேவருக்குக் கைங்கர்யங்கள் புரிவதையே புருஷார்த்தமாகக் கொண்டவரும், அப்பெருமானுக்குக் கோபுர மண்டப விமான ஆவரணரதாதித் திருப்பணிகள் எல்லாம் செய்தவரும், வடமலை என்ற பெயருள்ள மந்திரி சிரேஷ்டரைத் தம் தமையனாராகக் கொண்டவரும், திருமால் பக்தரும் சிறந்தவருமான ஹரிதாசரால் கேட்டுக்கொள்ளப்பட்டுப் பெருமாளுக்குத் திருவமுதுக்கும் நிரந்தர கீத மகாவாத்யாதிகட்கும் நாகலாபுரம் என்ற பிரதி நாமங்கொண்ட அரிகண்டபுரம் சர்வமானியமாகக் கொடுக்கப்பட்டது.[1]

இக்கல்வெட்டு பல செய்திகளைத் தெரிவிப்பதோடு, வடமலை வேளாளர்குலம், அரிதாசர் தமையனார், இராயருக்கு மந்திரியாக இருந்தார் என்ற செய்திகளையும் தெரிவிக்கிறது. இவரை அரிதாசர், திருமால் வணக்கம் கூறும் பாட்டொன்றிலும் குறிப்பிடுகின்றார்.

பட மா சுணமும் முதிரா.இளம்
பச்சை சூலும்
திடமா மறைகந் தமும்ஆகிநற்
செல்வன் ஆள
வடமா மலைஅண் ணனதுள்ளம்
வைக நாளும்
இடமாம் ஒருவற் கடியோங்களி
யாங்கள் தாமே.


  1. 32 சாசன தமிழ்க் கவி சரிதம்- பக். 146.

89