பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இருசமயவிளக்கம்


வியாசருக்கு நீட்டிய கை மடங்காமல் நின்றதேன்?' இவ்வாறு கேட்டவுடனே ஆரணவல்லிக்குக் கோபம் அதிகமாய் வந்து விடுகின்றது.

வேதமா மடந்தாய், அப்படிப் பகர்ந்த
வியாசருக்கு அவ்வியா சத்தால்
ஏத றும்புயத் தம்பளம் விளைந்ததென்
றுலகினில் உரைப்ப தேன்? என்னச்
சீதளக் குமுதச் செவ்விதழ் மேனித்
திலம்பதித் தெனக்கையும் சிறப்பக்
கோதறு சைவாகம மடந்தை யுடன்
குளிர்மறைக் கோமளம் கூறும்.

என்பதால் இதனைக் காணலாம். இத்தனையும் பொறாமையினால் சொல்லுவது; கைமடங்காமை சொல்லும் கதை அசாத்தியமே.

மங்குல்நேர் குழலாய், சிவசம யத்தோர்
மாச்சரி யத்தினாற் சூத
சங்கை யென்றோர் கற்பனா கதையைச்
சாற்றிய தன்மையே போல,
இங்கிது தனையும் பொறாமையி னாலே
இயம்புகின் றார்களத் தனையே,
அங்கு தெப்படியே யென்னில், உன்மனமொப்
பாமெனும் படிவிளம் பக்கேள்:

மெய்ப்பொருள் மறைகொண் டரிபரத் துவம்நான்
விளம்பியே வருகையி னாலும்,
இப்பொருள் தனையே முன்னமே வியாதர்
இயம்பிய தாகையி னாலும்,
அப்பெயர் வியாதர் மறையெலாம் பிரித்து
ஆராய்ந்தவ ராகையி னாலும்,

99