பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




செப்பிய புயத்தம் பணமவ ரிடத்திற்
செறிந்ததே யெனல்அசத் தியமே.

என்ற பாடல்களால் இதனைத் தெளியலாம். வாதங்களின் போக்குக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. இதையும் கூறுபவர் அரிதாசரே. தன் கட்சியொன்றே சரி, பிறர் என்ன சொன்னாலும் பிழை, அசத்தியம் என்பதே திருமாலடியாளான ஆரணவல்லியின் வாதம்.

இதுபற்றி அதிகம் விவரிக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை.இந்த 20-21ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்க நாகரிகத்தின் மோதுதலால் சில விபரீதமான வாதங்கள் நிகழக் காண்கின்றோம். கும்பகர்ணன் பெரியவனா ? வீடணன் பெரியவனா? பரதன் பெரியவனா? இலக்குவன் பெரியவனா? என்பன போன்ற வாதங்கள் எழுகின்றன. இவை யாவும் வீண் விதண்டாவாதங்களேயன்றி உண்மையான வாதங்கள் ஆகா. இவையொத்த இவ்விதண்டா வாதத்தைச் செய்கின்றார் அரிதாசர் என்றே நமக்குத் தோன்றுகின்றது. அருளாளர்கள் மன்பதை உய்யும் பொருட்டு அவ்வப்போது தோன்றி வருகின்ற சமயத் தத்துவங்கள் பற்றியோ அவர்களால் படைக்கப்பெற்ற கடவுளர்கள்பற்றியோ வாதங்கள் எழுப்புவது உசிதம் அன்று. இக்காலத்தில் நடைபெற்று வரும் விதண்டாவாதப் பட்டிமன்றத்தை 16-ஆம் நூற்றாண்டில் அரிதாசர் மிகவும் விரிவாக நடத்திக் காட்டுகின்றார் என்று கூறுவதோடு நாம் இதனை விட்டு விடுவோம்.

நூலில் சிறப்பாகச் சொல்லத்தக்கவாறு கவிதை அமைய வில்லை. பாடல்கள் தொட்ட இடம் எல்லாம் உரைநடையையொத்த 'வெள்ளைப் பாட்டாகவே உள்ளன. கவிதைச் சிறப்பினை எங்கும் காண்பதற்கில்லை. இரண்டு எடுத்துக்காட்டுகள்: கண்ணனார் கயிலாய யாத்திரையில் துவாரகைக் காவலரை நோக்கி "திண்ணிய மற்புயமரபீர், திரும்பி நான்வருமளவும், திகிரிசங்கம் கண்ணின தோளினரை அல்லால் நகர்புகுதல் ஒழித்தீர்” என நவின்றமாற்றம், மண்ணுலகில் பஞ்சம வேதப் பொருளாம். அரிவம்சம் அதனில் கூறும். "என்னுடைய பக்தர்களுக்கு இருபுயத்தில் சங்காழி எழுதல் வேண்டும், அன்னிய தேவதைகள் தமது ஆலயத்தில் புகல்வாரை

100