பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்களின் கூர்ந்த மதியைப் பாராட்டினாராம். 1960ல் தமிழக அரசு வக்கீலாகவும், 1954ல் அட்வொகேட் ஜெனரலாகவும்,1956ல் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.

நீதியரசராகப் பணியாற்றிய காலத்தில் எம்.ஆர்.இராதா எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கைக் கையாண்ட முறையை நாடே வியந்து கவனித்தது. நீதியரசராகப் பணியாற்றியபோது ஏழை மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு சட்டத்தின் போக்கு கெடாமலும் அவர்கள் நலம் பெறும் வகையிலும் தீர்ப்பு கூறியதால் மக்கள் நீதிபதி' என்று நாடே புகழ்ந்தது. இக்காலத்தில்தான் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் இல்லற நெறி' என்ற என் நூலைை இவர் கையால் வெளியிடச் செய்தேன்,'தொண்டைநாட்டுத் திருப்பதிகள் என்ற என் நூலுக்கு அணிந்துரையும் பெற்றேன்.நீதிபதியாக இருந்தபோது இவர் வழங்கிய தீர்ப்புகளைப் பொது மக்கள் நன்கு கவனித்தனர்.

1975, டிசம்பரில் நீதியரசர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின், பொதுத் தொண்டில் தீவிரமாக இறங்கி நாடே வியக்கும் வண்ணம் பணிபுரிந்தார். பொதுவாக நீதியரசர்கள் ஒய்வுபெற்றபின் ஒதுங்கியே வாழ்வது வழக்கு. ஆனால் அதற்கு விதிவிலக்கு நம் நீதியரசர் ரெட்டியார் அவர்கள். இக்காலத்தில் அவர்தம் திருப்பணி மகத்தானது; பெரும்புகழ் வாய்ந்தது.அருள்ஞானப்பெருவழி,இந்து மருத்துவமனை, பசு காப்பகம், ஜெய்கோபால் கரோதியா பள்ளிகள், வள்ளுவர் குருகுலம் மகளிர் உயர்நிலைப் பள்ளிகள், விசுவ இந்து பரிசத், தமிழ்நாடு வித்தியா பாரதி, விவேகானந்தர் கல்வி நிறுவனம், விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை, விவேகானந்தர் கலை ஆசிரம அறக்கட்டளை ஆகிய பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பு இவர் பார்வையில் இருந்தன. அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போன்றது தமிழ்நாடு இலவச வழக்கு வாரியத்தின் தலைவராக இருந்து பல்லாண்டுகள் பணியாற்றிய காலப் பகுதியாகும். இக்காலத்தில் அமைதியாக அநீதியை அநுபவித்துக்கொண்டு வாழும் ஏழைகள் இலவசமாக வழக்கு விசாரணை பெறும் திட்டம் ஒன்றைச் செயற்படச் செய்ததாகும். தேசிய காவலர் ஆணையத்திலும் உறுப்பினராக இருந்து பணியாற்றியது சிறப்பாகும். இங்ஙணம் பணியாற்றிய பெருமகனார் தமது 89வது அகவையில் வைகுண்ட பதவியை அடைந்த அன்று (7.12.2002) இத்தனை நிறுவனத்திற்குரியவர்கள்

-xii-