பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறாவின் வைணவ புராணங்கள்


உடலெலாம் கண்ண னன்றி
யொன்றிலை உணருங் காலை
கவலமா மயிலெ ருத்திற்
கவின்கனிந் தொழுகு மேனி
மலர்துழாய் அலங்கல் மாலை
மாயனுக் காற்று பூசை
அலர்தலை யுலகுக் கெல்லாம்
ஆற்றிய பூசை யாமால்

என்ற பாடல்களால் சகாதேவனின் துணிவினைக் காணலாம்.

சகாதேவன் உரைத்த மாற்றத்தைப் பொறாது போருக்கெழுந்த சிசுபாலனைக் கண்ணன் கொல்லுகிறான். சாலுவன் வதம், தந்தவக்கிரன் வதம் ஆகியவை தொடர்கின்றன.

பலராமன் தீர்த்த யாத்திரை பகரப் பெறுகின்றது.[1] இங்கு இவர் பல இடங்களைச் சுட்டியுரைக்கின்றார்.

தெண்டிரை நிலத்தொரு
திலக மாகிய
தண்டமிழ் நாட்டகம்
சார்ந்திட் டானரோ

என்பதால் இது பெறப்படும். பெண்ணை, பம்பை இவற்றில் தீர்த்தமாடிய பிறகு முருக வழிபாடு கூறப் பெறுகின்றது. சயிலம் பணிந்த பிறகு, தமிழ்நாடு, வேங்கடமலை, காஞ்சி, துளவப் படலை தாழ்மார்பன் கண்வளர் கோயில் (திருவரங்கம்), காவிரி, சிலம்பாரொழுது பூஞ்சோலை (திருமாலிருஞ்சோலை மலை), மதுரை வளநகர், வடித்த தீந்தமிழ் தண்துறைதொறும் மணக்கும் வையை, சேது, குலாசலம், (பொதியில்), பொருநை, கன்னியந்துறை (குமரி), திருவனந்தபுரம்,


  1. 8 வில்லிபாரதத்தில் பார்த்தனின் தீர்த்த யாத்திரைபகரப் பெறுவதுபோல, இங்கும் தமிழகத்தின் சுற்றுலா போல் காட்டப் பெறுகின்றது. பல்வேறு இடங்கள் சுட்டி விளக்கப் பெறுகின்றன.

30