பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


சுருதி கீதையின் சாரம்:

பகைத்து நாடுநர் பற்றுமாறு அற்றுணை
அகத்து நாடுத ராய விருவரும்
நிகர்த்துன் சேவடி நீள்வந் துற்றனர்
மிகுந்த நின்னிலை உள்ளவல் லேகொலோ.

என்பது. விருத்திராகரன் வதம், பிருகு முனி சென்றது, மறைந்த குழந்தைகளை அந்தணனுக்கு மீட்டுத் தந்தது, புனல் விளையாட்டு என்ற பகுதிகளோடு பத்தாம் கந்தம் முடிகின்றது. புனல் விளையாட்டு சண்டையில் முடிந்து யாதவர் மடிவது பின்னர் விரிக்கப்பெறும். {அடுத்த கந்தத்தில்

பதினோராம் கந்தம்: 18 அத்தியாயங்கள் கொண்டது. யாதவன் சாம்பன் உலக்கை பெறுதல், வசுதேவர்க்கு நாரதர் உலக நிலையாமையையும், கண்ணனின் தத்துவமும் உரைத்தல் பகுதிகள் அமைகின்றன.பின் பல அத்தியாயங்கள் ஞானப்பகுதி வருணாசிரமம், இயமநியமம், பூசனை என்பன அமைகின்றன.கண்ணன் தன்னுடைய அடிச்சோதிக்கு எழுந்தருளிய செய்தியுடன் இந்தக் கந்தம் நிறைவு பெறுகின்றது. கண்ணன் போனபின் துவாரகையைக் கடல் கொண்டது.

கருமுகி வனையஅக் கண்ணன் பின்தொடர்ந்து
இருவிகம் பேகிய விசையும் மெய்ம்மையும்
தருமமும் பொறுமையும் தவமும் தானமும்
மருவின. தவணியின் மறஞ்செய் வெங்கலி,

காலமும் பிறிவொரு கலப்பு மற்றுயர்
சீலமு மானவன் செய்கை இந்திர
சாலமும் அவைக்களஞ் சான்ற கூத்தினர்
கோலமும் அல்லதென் கூறல் வேண்டுமால்.

பன்னிரண்டாம் கந்தம் 10 அத்தியாயங்கள் கொண்டது. கலி தன்மம் உரைத்தல், கற்கியவதாரம், பிரளயம், பரீட்சித்து வீடுபேறு அடைதல், சனமேசயன் சர்ப்பவேள்வி செய்தல்,வேதம் நான்கு என்ற

32