பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


நம்பி, ஆளவந்தார்,பெரிய நம்பி, எம்பெருமானார், பெரிய நம்பிபிள்ளை, நம்பிள்ளை, மணவாளமாமுனி, சீரங்கநாராயண முனி, பராசர பட்டர், வேதவியாச பட்டர், கந்தாடையண்ணன், வாதிட்டையாயன் (2 பாடல்கள், பின்னர் மீண்டும் கண்ணனைப் பல பாடல்களால் துதித்து, சுக முனிவரையும் வணங்கி, சாத்துவிக மகாபுராணமாகிய இதனைச் சொல்லத் தொடங்குகின்றார். இவ்வாறு 'பாயிரம்’ என்று சொல்லத்தக்க திருவரங்கப் படலத்துள்ள 155 பாடல்களில் இவர் மிக விரிவாகத் துதி சொல்லியுள்ளார். தமிழில் இவ்வளவு அதிகமான கடவுள் வாழ்த்துப் பகுதி வேறு எந்த நூலிலும் இல்லை. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் யாவும் 'வாழி' என்ற முடியையே கொண்டவை. மேலும் இங்கு, பெரும்பான்மைப் பகுதி பாடல்தோறும் யாப்பை மாற்றி இவர் பாடி வரும் முறை ஒரு விசித்திர அமைப்பாகும்.

இன்னொரு சிறப்பு. இந்த நூலில் ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் ஒரு திருமால் வணக்கப் பாடல் வருகின்றது. இவற்றையும் திருவரங்கப் படலப் பாடல்களையும் சேர்த்தால் இது 300 பாடல்கட்கு மேற்பட்ட ஒரு சிறந்த திருமால் தோத்திர நூலாக அமையும். பல சமயம் இரண்டு துதிப் பாடல்கள் தரப் பெறுகின்றன. முதல் பாடல் துதியில் 'தொண்டீர்' என்று மக்களை நோக்கிய விளி அமைகின்றது. இரண்டாம் பாடல் வரும்போது 'என் மனனே, உலகேழயின்றவன் நாமம் பகர்தி' என்பது போன்ற தொடர்களால் நெஞ்சை விளித்துப் பேசுகின்றார். சிற்சில இடங்களில் அந்தந்தப் படலத்தில் கூறப்போகும் பொருளைச் சுருக்கி 'இவ்வாறெல்லாம் செய்த கண்ணனை வணங்குகிறேன்' என்கின்றார். பன்னிருநாமங்களையும் சொல்லி வணங்கும் பாடல்கள் பல.13 ஒரு பாடல்:

கேசவன் நாராயணன் உயர்மாதவன்
கிளர்கோ விந்தன் விண்டு
மாசகன் மதுசூதன் திரிவிக்கிரமன்
மன்னி வாமன் அயிர்மலியும்

13 நம்மாழ்வாரின் பன்னிரு திருநாமப்பாட்டு (திருவாய் 27) நினைவிற்கு வருகின்றது.

38