பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராண பாகவதம்


 நாச்சியார் அவதாரப் படலத்தில் நாச்சியார் திருவவதாரம் செய்து வளர்ந்து வருகின்ற நிலையைக் குறிப்பிடுமிடத்து பிள்ளைத் தமிழுக்குரிய பெரியாழ்வாரின் கருத்துகள் பலவற்றைப் பாடலில் அமைத்துப்பாடியுள்ளார். பின்வரும் பாடல்'தாலப் பருவத்து'க்குரியது.


தாலேலோ வினைதானி லாதவள்
தாலேலோ கதைதங்கு பொற்குயில்
தாலேலோ கமலா சனத்தவள்
தாலேலோ திருவென்று சாற்றினார்.

என்பது. தொடர்ந்து விளையாட்டு. 'செங்கீரையாடுக செம்மையுற', 'சப்பாணி கொட்டுக சந்தமுற','தவழ்ந்தே விளையாடுதி, 'தோள்வீசி நடந்திடு', 'தளரும் நடை நீ நட', 'அச்சோ புயலே', 'புறம்புல்குதி, 'அப்பூச்சி கண்டாடுக', 'அம்புலி வா என்று துதி', 'அக்காக்கை பொன்னால் அமர்கோல் கொடுவா', 'தும்பிமலர்ஒது' என்றெல்லாம் தாயார் போற்றுவதாகக் கூறி மகிழ்கிறார். விளையாட்டைச் சொல்லும்போது, 'சிறு போது சிறு சோறு அடுதல்', 'கழங்காடுதல்', 'அம்மனை பாடியாடுதல்','பந்தாடுதல்','ஊசலாடுதல்','நீராடல்,'மலர் கொய்தல்' என்பவற்றைத் தனித்தனியாக விரித்துரைக்கின்றார்.

இயற்கையை இவர் வருணிக்கத் தலைப்படும்போது எங்கும் மர வகைகளை அடுக்கிச் செல்வார் (7. 32-35).

பாகவதக்கதை இந்த (வடமொழி) பாகவதத்தின் போக்கும் தொடர்பும் விளங்குதற் பொருட்டு கதையின் சுருக்கம் ஈண்டு தரப் பெறுகின்றது.

ஆறாம் அத்தியாயத்தில் 'நாச்சியார் திருவவதாரப் படலம்’ என்ற பெயரோடு கதை தொடங்குகின்றது. கண்ணனுடைய தேவியாகிய உருக்குமினி விதர்ப்ப நாட்டு மன்னன் மகளாகப் பிறந்து, மணப்பருவம் அடைந்தபோது நாரத முனிவன் வருகின்றான் (6), 78 படலம் வரையில் அவளுக்கு நாரத முனிவன் கூறும் வரலாறு ஆகும். முனிவன் அவளுக்கு கசேந்திர மோட்சம், வராக அவதாரம், கபில முனி வரலாறு, நரசிங்க அவதாரம், துருவன், மச்சாவதாரம், கூர்மாவதாரம் (7-13) ஆகியவற்றை உரைக்கின்றான். அடுத்த அண்டப்படலம் (14) என்பதில் பூலோகம் முதலான உலகங்கள், தீவுகள்

41