பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புரானங்கள்


முதலியவை மற்ற புராணங்களில் உள்ளனபோல் விரிவாக நுவலப் பெறுகின்றன. பின்னர் பிருது சக்கரவர்த்தி, இடபராசன், வாமன அவதாரம், அஜாமிளன், உருக்குமாங்கதன், அம்பரீடன், பரசுராம அவதாரம், இராகவன்.அவதாரம் ஆகிய வரலாறுகள் இயம்பப் பெறுகின்றன (15-22).

அடுத்த 42 படலங்கள் (23-64 கண்ணன் பிறந்தது முதல் அவனுடைய படத்தை உருக்குமிணி காண்கின்ற வரையில் கண்ணனுடைய வரலாற்றை நாரத முனிவன் நவில்கின்றான். தேவகிப் படலம் (23) கம்சனின் தங்கையாகப் பிறந்த தேவகியின் மணமும் அவள் பெற்ற குழந்தைகளைக் கொன்ற செய்தியையும் கூறுகின்றது. தேவர்கள் திருமாலை வேண்ட அவர் பூவுலகில் தேவகி வயிற்றில் கருவாய் வந்து தங்குகின்றார். சிறையிலிருந்த வசுதேவர் ஆயர்பாடியில் நந்தகோபன் மனைவியசோதையிடம் அக்குழந்தையைக் கொண்டு போய் விடுகின்றார். உரோகிணி பெற்ற பெண்ணைத் தேவகியின் பெண் என்று எண்ணிக் கம்சன் கொல்ல முயலும்போது, அக்குழந்தை மாயையாக மாறி, உன்னைக் கொல்லத் திருமால் குழந்தையாகப் பிறந்திருக்கிறான் என்று கூறி மறைகின்றது. கம்சன் தன் மந்திரிகளோடு ஆலோசித்து அக்குழந்தையைக் கொல்ல வழி என்ன என்று தேடுகிறான் (24).

பூதனை வதை, சகடாசுரன், காரியாசுரன், குக்குடாசுரன் வதைகள் (23-28) நடைபெறுகின்றன. கண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வாயினுள் யசோதை உலகத்தைக் காணுதல் (29), ததிபாண்ட முத்தி (30), மருத மரமாக வந்த அசுரர், பகாசுரன், அகாசுரன் வதை (31-33), கண்ணன் தானே ஆயர் சிறுவராயும் கன்றுகளாயும் இருந்து மாயை காட்டுதல் (34), தேனுகன் வதை, காளியமர்த்தனம், பெலம்பன் வதை, கோபியர் ஆடை கவர்தல், வனத்திலிருந்த வேதியர் மனைவியருக்கு அருள் புரிதல், கோவர்த்தனக்கிரியைத் தூக்கல்'[1], கல்மாரியிலிருந்து காத்தல், குழலுதுதல்[2]' (35-42) அம்பிகாவனத்தில் நந்தனை நாகம் பற்றி விழுங்கக் கண்ணன் திருவடி பட்ட மாத்திரத்தில் நாகம்


  1. 14 பெரியாழ். திருமொழி 3.5 படித்து நுகரத்தக்கது.
  2. 15 மேலது 3.5 ஓதி உணர்ந்து மகிழத்தக்கது.

42