பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராணபாகவதம்


வித்தியாதரனாகி விமானத்தில் ஏறிச் செல்லுதல் (43, கும்பன் பெண் நப்பின்னையை ஏழு விடைகளை அடக்கி மணத்தல் (44), அருட்டாசுரன், கேசி வதை, வியோமனன் வதை (45.47), அக்ரூரன், சமந்தக மணியின் வரலாறு (48), தாருகன் வதை (49), சுதாமகாவுக்கு அருளுதல், திரீவக்கிரி என்ற கூனிக்கு அருளுதல் (51), இந்திர தனுவை யொத்த ஒரு வில்லை வளைத்து வளைத்து ஒடிக்க, சூழ்ந்த சேனையை அழித்தல் (52), கஞ்சன் செய்யும் கொலை முயற்சி - குவலயாபீடம், சானூரன், கம்சன் வதை (54-56), உக்கிரசேனன் முடிசூடுதல், சாந்திய முனிவர்க்கு இறந்து போன பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று குரு தட்சிணையாகக் கொடுத்தல் (5758), கண்ணன் மதுரையில் இருக்கும்போது அங்கிருந்து உத்தவன் ஆயர்பாடி சென்று கண்ணன் பழகிய ஆயர் கன்றுகள் இடங்கள் பார்த்து வருதல் (59).

பாண்டவர்க்கு நேர்ந்த இன்னல்களை அக்ரூரன் சொல்லக் கேட்டு அறிதல் (60), கம்சன் வதம் கேட்டு அவன் மாமனாகிய சராசந்தன் படையோடு வந்து, கண்ணனிடம் போரிட்டுத் தோற்று ஓடுதல் (61), அசுரர் கோமான் சிரகாளன் என்பவன் முனிவருக்குத் தீமை செய்வது கேட்டு அவனோடு பொருது அவனை அழித்தல் (62), காள எமன் வதை (63), இரேவகன் என்னும் அரசன் மகள் இரேவதியை மணத்தல் (64), நாரத முனிவன் கண்ணன் குணாதிசயங்களை உருக்குமினிக்கு எடுத்துக்கூற அவள் அவனை மணக்க உறுதி கொள்ளுதல், அவளுடைய விரகதாபம், ஒரு தோழி கண்ணன் உருவத்தை படத்தில் எழுதுதல் (65), விதர்ப்பராசன் மந்திரிகளோடு கலந்து மகளுக்கு ஏற்ற மணவாளன் கண்ணனே என முடிவு செய்தல், ஆனால் அவனுடைய மகனான உருக்குமிதன் சிசுபாலனுக்கு அவளைக் கொடுக்கத் துணிந்து மறுநாளே ஒலை போக்குதல், உருக்குமிணி ஒரு புரோகிதன் மூலம் கண்ணனுக்கு ஒலை அனுப்புதல், மறுநாள் சிசுபாலன் வரவும் உருக்குமிதன் தங்கைக்கு மணக்கோலம் செய்யுமாறு கட்டளையிடுதல், உருக்குமிணியும் அன்னையுமாக அம்பிகை ஆலயம் சென்று வழிபட்டு வரும் வழியில் கண்ணன் வர அன்னை உருக்குமிணியைக் கண்ணன் கையில் கொடுக்க, அவன் அவளைத் தேரில் ஏற்றிச் செல்லுதல்

43