பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை, பு. இ. புராண பாகவதம்


சாம்பனுக்கு மனம் செய்து கொடுத்தல் (103), லவனாகரனுடன் பொருது அவன் மகள் உடாங்கனையைத் தன் மகன் சாம்பனுக்கு மணம் செய்வித்தல் (104).

தரும புத்திரனுடைய இராசசூய யாகத்தில் தன்னை எதிர்த்த சராசந்தனை வதைத்தல் (105). சிசுபாலன், சாலுவன், தந்தவக்கிரன் வதை (106-108), பாண்டவர் வனவாசம் (109). தரும புத்திரனுக்கு வியாசர் குருகுல வரலாறு கூறுதல் (110). தட்சயாக அழிவை வியாசர் கூறுதல் (111). பார்த்தன் சிவனை நோக்கித்தவம் செய்து பாசுபதாத்திரம் பெறுதல், ஊர்வசியின் சாபம் பெறுதல் (12. வீமன் மந்தார மலர் பெற்று வருதல் (113). சிறைபட்ட துரியோதனனை விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சுப் பொய்கை வரலாறு (114), விராடநகர் வாசம், கீசகன் வதம் (115). கிருட்டினன் தூது (16). மகாபாரதப் போர் (117). பலராமன் தீர்த்த யாத்திரை (118). துரியோதனன் வதை (119. உத்தரை வயிற்றில் பரீட்சித்து பிறத்தல் (120). மிதிலை மன்னனுக்கு அருள் செய்தல் (12). குசேலர் அருள் பெற்றது (122), அந்தணன் புதல்வனை மீட்டது, தசாவதார நடிப்பு (123). யாதவர் சாபம் பெறுதல், உத்தவன் வினவும் வினாக்களுக்குக் கண்ணன் உபதேசம் கூறி அனுப்புதல்,இதுவே உபதேசப் படலம் (124). துவாரகையில் இருந்தோர் முக்தி அடைதல் (125). மார்க்கண்டேயர் வரலாறு, விருகாசுரன் (127-128). பரீட்சித்து மோட்சம் அடைதல், சனமேசயன் தந்தைக்குக் கடன்கள் ஆற்றி பாகவதம் கேட்டு முக்தி அடைதல் (129-130). கல்கி வரலாறு, கலியுக தர்மம் (131). வைனதேயனுக்குப் புராணங்களின் சாரமான திருமால் பதிகளையும் மூர்த்திகளையும் தீர்த்தங்களையும் வியாசர் உரைத்துப் புராணத்தை நிறைவு செய்தல் (132).

இவண் குறிப்பிட்டதே பாகவதக் கதை. அளவால் கந்த புராணம், கம்ப ராமாயணம் ஒத்த பெருமை இந்நூலுக்கு உண்டு என்பது தெளிவு. இவ்வளவு பெரிய நூலுள்ள பொருள்களைத் தேர்ந்தெடுத்து சில மட்டும் இங்கு சொல்ல முற்படுகிறோம். எல்லாவற்றையும் சிறு அளவில் சொல்லிவிட முடியாது.

புராண பாகவதம் - நூற்பொருள்: நூலில் அண்டப் படலம்’ என்பது பூவுலகம், தீவுகள் முதலிய பிரபஞ்சப் பகுதிகள் எல்லாவற்றின்

45