பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புரானபாகவதம்




மாதவப் பெண் மதிமுகம் பெண்மலர்
மீதி னுற்றபெண் வித்துருமப்
ஏதமற்ற பெண்ணிந் திரையாகும் பெண்
ஒதிமப் பெண்ணு ருக்குமிணிப் பெண்ணே

இவற்றில் யாப்பும் சரியாக அமையவில்லை.

கண்ணனுக்குத் தேவியர் எண்மர்; பதினாயிரத்தொரு நூற்றெண்மர் என்று புராணம் சொல்லும்.இத்தனை பேரிடமும் அவன் எவ்வாறு நேயமோடிருக்கிறான் என்பதைக் கண்டறிய ஒருநாள் நாரத முனிவன்'[1] வந்தான். அவன் கண்டபோது, கண்ணன் ஒவ்வொரு தேவியர் இல்லிலும் எவ்வெவ்வாறு இருந்தான், எப்படி நாரதரைத் தவறாது உபசரித்தான் என்பதைப் புராணம் மிகவும் சுவைபடக்கூறும் (99.34-57)

'உபதேசப் படலம் (படலம்-124) என்பது இப்புராணத்தில் ஒரு சிறப்பான பகுதி. இதனுள்ளும் உத்தவன் கேட்க கண்ணன் உத்தரம் கூறியனவாக 14 பாடல்கள் உள்ளன. அவை மிகவும் சிறப்பானவை; அவை கீழே தரப்பெற்றுள்ளன.

ஏதமில் இயமம் எத்தனை, நியமம்
எத்தனை, சற்குணம் ஏது,
நீதியாய் வழங்கும் தவம்ஏது, சவுசம்
ஏது, நிகரில்பொறை ஏது,
பாதகம் அகலும் தவம்எது, தியாகம்
எதுதனம் எதுபலம் ஏது,
வேதமார் வேள்வி ஏது, மறைநெறியார்
விழுமிய தக்கணை ஏழு. (1)


  1. 17 தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் என்பதையே தந்தை பெரியார்ஒரு நகராண்மைக் கழகத்திற்குரிய கூட்டம் என்று கிண்டல் செய்வார். இது தெரிந்திருந்தால் இதனை கிண்டல் செய்திருப்பார். மக்கள் இராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்புவதால் இவ்வாறு கிண்டல் செய்தார். கட்டுக்கதை என்று கொண்டு இதனைத் தள்ளிவிடுதல் அறிவுடைமையாகும்.

49