பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை. பு. இ. புராண பாகவதம்


தமிழ்நாட்டில் ஆண்டாள் நீளையின் அவதாரம் என்று சொல்வர்.[1] இந்த நீளையே நப்பின்னை என்பது பிள்ளை லோகஞ்சீயர் முதலான ஆன்றோர் கருத்து.[2] வடநாட்டுக் கிருஷ்ண லீலைகளில் கிருஷ்ணனுக்கு இராதை எப்படி ஒப்பானவளோ, அப்படியே தமிழ்நாட்டில் நப்பின்னை ஒப்பானவள்.

நப்பின்னை அல்லாமல் அருளாளதாசர், 'நாக்கினசித்து திருக்கல்யாணம்’ என்ற ஒரு படலம் அமைத்துள்ளார். இங்கு இவ்வரலாறு 32 பாடல்களால் பகரப் பெறுகின்றது. கெளசலராசன் மகள், 'நாக்கினசித்து', தன்னிடமுள்ள ஏழு எருதுகளையும் அடக்கியவனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுப்பதாக முரசறைவித்தான். பிற அரசர்கள் எருதுகளை அடக்க முடியாது போக கண்ணன் அவற்றை அடக்கி காய்சினசித்தை மணந்தான். வந்து தடுத்த மன்னர்களை அர்ச்சுனன் தன் அம்பு மழையால் தடுக்க, கண்ணன் காய்சினசித்தைத் துவாரகைக்குக் கொண்டு சென்றான்.

இது புராண வரலாறு. இங்கு நாக்கினசித்து அரச பரம்பரை. நப்பின்னை ஆயர்குலத்தவள். ஆனால் எருதுகளை அடக்கி மணந்த இரு வரலாறுகளையும் இரு மணங்களையும் புலவர் கூறுவது ஒரு விசித்திரமே. நப்பின்னையின் வரலாறு வடமொழியில் இல்லை. கண்ணன் மணந்த தேவியருள் தலைசிறந்தவர் எண்மர் [3]அவர்களாவர்:


  1. 19 துளசிச் செடியின் அடியில் பூமியில் கிடந்தமையால் பூமிப் பிராட்டியாரின் அம்சமாகவும் கூறுவதுண்டு. சீதாப்பிராட்டியால் உழுகின்ற கொழு முனையில் அகப்பட்டமையால் பூமிப் பிராட்டியாரின் அமிசமாகக் கூறுவர்.
  2. 20 மு.இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி (1938)நப்பின்னைப் பிராட்டியார் என்ற கட்டுரை காண்க
  3. 21 கண்ணன் தேவியர் எண்மரை மணந்தான் என்ற வரலாற்றைத் தழுவி சிந்தாமணியில் சீவகனுக்கு ஆசிரியர் திருத்தக்கதேவர் எட்டுமணம் சொல்லுகிறார். ஏறு அடக்கிநப்பின்னையை மணந்ததற்கு ஏற்ப, சீவகன் ஏறு அடக்கிப்பதுமுகனுக்கு ஆயர் குலப்பெண்ணான கோவிந்தையை மணஞ் செய்விக்கின்றான். அங்கும் கோவிந்தைமணம் சீவகனுடைய எட்டு மணங்களுக்குப்புறம்பாகத் தொடக்கத்தில் உள்ளது. கடைசி மணம் பாகவதத்தில் இலக்கணை மணம் சிந்தாமணியிலும் கடைசி மனம் இலக்கணை மணம்.

55