பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


உருக்குமினிப் பிராட்டி மித்திர விந்தை
சத்தியபாமை சத்தியை
சாம்பவதி பத்திரை
காளிந்தி இலக்கனை

என்று வடமொழிப் புராணங்கள் கூறும். இவ்வெண்மருள் முதல் இருவரையுமே அடியவர் உலகம் நன்கு அறியும். இங்கு நீளையோ இராதையோ சொல்லப் பெறவில்லை. நப்பின்னை பற்றிய தமிழ் வரலாறுகள் வடமொழித் தொடர்பில்லாமலேயே வழங்குபவை. வடமொழியையொட்டி எட்டு மணங்களையும் பற்றிக் குறிப்பிட்ட அருளாளதாசர், தமிழ் மரயையொட்டி நப்பின்னை மணத்தை அதிகமாகச் சொன்னார் போலும். எப்படியும் ஏறு தழுவிய இரு வரலாறுகள் இங்கு உள்ளமை அறியத்தக்கது. அன்றியும் உருக்குமினி திருமணத்திற்கு முன் நப்பின்னை, இரேவதி என்ற இருவர் மணங்களை இப்பாகவதம் கூறுவது கருதத் தக்கது.”[1]

சத்தியை-சத்தியவதி, நாக்கினசித்து-நக்னஜித் என்று வடமொழியில் கூறப்பெறும்.

பிற செய்திகள்: 'அச்சுதானந்த கோவிந்தன்' என்பது இவருக்குப் பிடித்தமான ஒரு தொடர் உருக்குமிணியை நாச்சியார் என்றே சொல்லுவார்; இரு படலங்களை இப்பெயரையொத்து அமைத்துள்ளார். உருப்பிணி என்றும் சொல்வார்; இச்சொல் வடிவம் நாலாயிரப் பிரபந்தத்துள்ளும் காணப்படுவது. வடமொழிப் பெயர்களைத் தமிழில் வழங்கும்போது சில ஆசிரியர்கள் தம் மனம் போல் மாற்றிக் கொள்வர். 'சிஷ்யன்' என்ற சொல் 'சீடன்’ எனவே வழங்கும் மணவாள மாமுனி 'சிச்சன்' என்பார். வானாசுரன் மகள் 'உழை' என்று சிலப்பதிகாரம் கூறும். அருளாளதாசர் 'உடாங்கனை' என்றே வழங்குகின்றார்.இவர் சிலப்பதிகாரம் பயின்றதில்லை போலும் 'மிதிலை' என்பதை 'மிதுலை' என்று குறிப்பிடுகின்றார். காவிய நாயகிக்குரிய சிறப்புகள் அனைத்தையும் உருக்குமிணிப் பிராட்டியாருக்கு அமைத்துப் பாடுகின்றார். உருக்குமிணி அவதாரம்


  1. 22 ஆயர் குலத்து மணங்கள் யாவும் 'ஏறு தழுவுதல்' என்ற முறையில் வருவதும் சிந்திக்கத்தக்கது

56