பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.திருக்குருகைமான்மியம்




கற்றிடா ததையும் கற்றதாய் மேற்கொள்

கரவொடும் கவிசிறிதுரைப்பத்

துற்றுளார் முழுதுடை யம்யாம் அவற்றிற்

கொண்மையோம் எனஅவை அடக்கப்

பெற்றுளான் கழகத் துரைத்திடாப் படுபின்

பேணியே அவர்கள்பா லவற்றைத்

தெற்றென வுணர்ந்து கற்றிடா திடரே

செயத் துணிந் துழல்படி றுடையோர் (988)


கன்ன பரம்பரை முறையேஇ லக்கணமும்

இலக்கிய மும்கற் பிப்போர்கள்

சொன்ன வரும்பதங் களினைச்சிறைப் புறத்தும்

துன்னின ராய்த்துணிந்தா ராய்ந்த

பின்ன ரவைக்களத் தெரிந்துயி ணங்கினராய்

வாதுசெயப் பெற்ற காலை

இன்ன திதுவென விஃதென் றிறுமாந்தி

குருத்து ரோகிகளா மீனர் (990)


பொற்புடைச் செந்தமிழ் தெரிந்துசொன் னலமும்

பொருணல மும்புணர் வதாகச்

சிற்பரன் மேலுயிர்க் காக்கங் குறித்தறிஞர்

அணிபெறவே செறிந்த யாப்பை

அற்ப ரெனத்திரி நரர்தம் பேரினொடும்

ஊரினை வைத்தவி ழுக்காகத்

தற்கரப் புன்கவிக ளெனப்பிறர் சிரிப்பக்

கொடுந்துயிர்க் குத்தவறு பூண்டோர் (99)

என்ற நான்கு பாடல்களிலும் இச்செய்தியைக் காணலாம்.

'பிரமன் தோத்திரச் சருக்கம் என்ற அத்தியாயத்தில் பல துதிப்பாடல்கள் உறுப்புகள் பெற்ற பயன் இறைவனுக்கு ஆட்செய்வதே

75