பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.கூதற்புராணம்.




பூதவிநோத நம்பி கோதமனார் மடந்தை

பூதல மேல்விழுந்த துயரேதீர்

பாதவிநோத நம்பிபூமகன் மேவுநம்பி

பார்மகண் மேவு நம்பி னுறவோர்சோ

வேதவிநோத நம்பி யாடகனி வாயுண்ட

வீரவிநோத நம்பி குழல்வாய்வேய்

நாதவிநோத நம்பிசீர் புகழ்வாய் மையன்பர்

நானில மீது வந்து பிறவாரே

(2600)


நீதிப்புராணமறை போதில் போதமவை

நேசித்த கேள்வியவை வழியாயே

சோதி சொருப ரூபத்த ராகியொளிர்

சோபைப் பொன் வீடுதனி . . . . .

னாதிப் பிரானெனவு மாழிப் பிரானெனவும்

ஆசைப் படாமலுன தடிபேணார்

சாதித்த தேவரடி பூசிப்பதா லுறுதி

சாதிப்ப தேதிவர்கள் அறியேனே

(2619)


என்பன காண்க.

(4) கூடற் புராணம்

மதுரை மாநகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கூடலழகர் கோயிலுக்குரியது இந்தப் புராணம்; ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. இஃது 16-ஆம் நூற்றாண்டுக்குரியது. இந்நூல்பற்றிய விவரங்களை ஈண்டுக் காணலாம்.

கூடல்: கூடலழகர் திருக்கோயில் மதுரை மாநகரில் உள்ளது. இது 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்று. இத்திருக்கோவிலுக்கு இரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒன்று பெரிய திருமொழி 9.2:5; மற்றொன்று நான்முகன் திருவந்தாதி 39.

77