பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வ.உ.சி.

கிறது; கைநடுங்குகிறது. இந்தத் துக்கத்தைத் தென் இந்திய ஜனங்கள் முக்கியமாய் சிதம்பரம் பிள்ளையை அறிந்த தமிழ்நாட்டு ஜனங்கள் எப்படிச் சகிப்பார்கள்? ராஜத்துவேஷக் குற்றங்கள் நம் தேசத்தில் இதுவரையில் அடிக்கடி நேரிடுவதில்லை. நமக்கு ஆப்த நேசராய், தமது ஜன்ம தேசம் முதலிலும் இந்தியா இரண்டாவதுமாய்த் தமது இருதயத்தில் குடிகொண்டிருக்கிறதென்று சொல்லிக் கொண்டு வந்த லார்ட் கர்ஸான் ஏழு வருஷம் ஆட்சி நடத்தினதின் பலனாக ராஜத் துவேஷக் குற்றங்கள் நேரிட்டு, ஆங்கிலேய மாஜிஸ்ட்ரேட்டுகளால் தண்டிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கேசிலும் இந்தக் கொடுமையான சிக்ஷைகள் விதிக்கப்படவில்லை. பாலகங்காதர திலகர் 1897ஆம் வருஷத்தில் தண்டிக்கப்பட்டபோது–அவருக்கு 11/2 வருஷங் கடுங்காவல் விதிக்கப்பட்டது. பிறகு ஒரு வருஷமாகக் கவர்மெண்டால் குறைக்கப்பட்டது. பிறகு நேரிட்ட கேஸ்களிலும், ஒரு வருஷம் இரண்டு வருஷம் காவல் தண்டனை விதிக்கப்பட்டதேயன்றி இந்தப் பயங்கரமான சிக்ஷைகள் விதிக்கப்பட்டதில்லை. பம்பாய் ராஜதானியில் ஒரு பத்திராசிரியர் மிகுந்த வயது சென்றவர் அவரை ஸெஷன் ஜட்ஜி 14 வருஷம் தீபாந்தர சிக்ஷை செய்தார். அது ஹைகோர்ட்டில் ஒரு வருஷமாக மாற்றப்பட்டது. பஞ்சாப்பிலும் வங்காளத்திலும் ராஜத்துவேஷக் குற்றங்கள் செய்தவர்களுக்கும் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை. “ஸ்வராஜ்யா” என்ற பம்பாய்ப் பத்திரிக்கைக்கு இரண்டு குற்றங்களுக்கு 3 வருஷம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. ராஜத்துவேஷக் குற்றஞ் செய்ததாக விசாரிக்கப்பட்ட இந்தியர் எவரும் இதுவரையில் தண்டனையடையாமல் விடுபட்டதாக நாமறியோம். ஒவ்வொரு கேஸிலும் கடுமையான தண்டனையே விதிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி கேஸ்களிலும் கொடுந்தண்டனை விதிக்கப்படுமென்றே ஜனங்கள் சொல்லிக் கொண்ட போதிலும், இப்படிப்பட்ட அசுரத் தண்டனைகளை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. கவர்ன்மெண்ட் பக்கம் கேஸ்களை நடத்தின மிஸ்டர் பெளவல், இது வரையில் சென்னை ராஜதானி ராஜபக்தி நிறைந்த தேசமாயிருந்தது; ராஜத் துவேஷக் குற்றம் செய்து விசாரணைக்கு வந்தவர்களேயில்லை; ஆகையால், இந்த ராஜதானி அதன் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், சிவா, சிதம்பரம்பிள்ளை கேஸ்களில் பலமான சிஷைகள் விதிக்கப்பட்டு, இனி ராஜத் துவேஷமுள்ளவர்கள் வெளிக்கிளம்பாமல் செய்ய வேண்டுமென்று ஜட்ஜியைக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்டுக் கொண்டவர்கூட இப்படிப்பட்ட தண்டனை