பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


விளங்குவேன். இவற்றால் எனது புதுப்பொலிவும் மாறாமல் நிற்கும். இதனால்,

‘புது வீ ஞாழலொடு' (நற் : 166 : 8) 'பொன்மலர் புது வீ’ (ஐங். 208 : 3) "பைங்கொடி முல்லை மென்பதப் புது வீ’ (அகம்:764) எனப் புதுப்பட்டம் பெற்றேன்.

நான் ஒரு செம்மல் இப்புதுமை எத்துணை பொழுது தாக்குப் பிடிக்கும்? ஒவ்வொன்றும் மறுநாளே பழமை கொள்ளும். இறுதிப் படுக்கை ஒரு நாள் நீண்டால் இறப்புப் படுக்கை ஆகிவிடும். இறந்தால் புதுப் பட்டம் போய்ப் பழைய பட்டம் கிடைக்கும். ஆம், [1] ஆவேன். பழம் பூ ஆனாலும் எனக்குக் கிடைக்கும் பெயர் பெருமைக்கு உரியது.

"செம்மல் பழம்பூ ஆகச் செப்புவர்'’33 'செம்மல்" என்னும் பெயர் தலைமைத் தகுதிக்கு, அருக தேவனுக்கு, இறைவனுக்குச் சூட்டப்பட்ட பெயர். செய்ய எடுத்த வினையைத் தொடுத்து முடித்த உள்ளம் செம்மாப்பு அடையும். இது,

'செய்வினை முடித்த செம்மல் உள்ளம்'34 எனப்பட்டது.

'அருந்தொழில் முடித்த செம்மற் காலை” எனச் செயற்கரிய செயலைச் செய்து முடித்த காலமும் தலைமைத் தகுதி பெற்றுச் 'செம்மல்' எனப்பட்டது.

எனது வாழ்வு ஒருநாள் வாழ்வுதான். அவ்வொரு நாளில் எடுத்த செயலை முடித்தேன்; அரிய தொழிலை நிறைவேற்றினேன். என்ன அரியதொழில்? பிறர்க்கென வாழ்வதே என்தொழில்.


33 சேந், தி :மரப்பெயர், 35 குறுந் , 270 :5 34 தொல் : பொருள் : 144 : 53 .

       *5
  1. பழம் பூ