பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யாயின. மூன்று நிகண்டுகள் கொள்ளப்பட்டன. அவை கூட்டும் குழப்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. சங்கப் பாடல்களிலன்றிப் பிறவற்றில் பொருந்தாக் கூறுகளும் பொய்மைகளும் இனத்தாழ்வுயர்வுத் தினவுகளும் இடம் பெற்றிருப்பது இயல்பு. அவை ஆங்காங்கே குறிக்கப்பட்டுக் கரணியங்களுடன் மறுக்கப்பட்டுள்ளன. சென்னை (இ)ராக்போர்ட்டு வெளியீட்டகத்தார் இப்பெருநூலை வெளியிட ஆர்வங்கொண்டனர். நல்ல தாளில் குறிப்பிடத்தக்க சிறந்த பதிப்பாக்கியுள்ளனர். அவர்களைப் பாராட்டி நன்றி கூறுகின்றேன். இன்றையப் புலமைச் சான்றோரில் முதல்வராகத் திகழ்பவர்கள் டாக்டர் வ. சுப.மாணிக்கனார் எம்.ஏ, பிஎச்.டி. அவர்கள். சீரிய புலமையும் நேரிய நோக்கும் கொண்டவர்கள். அவர்களது அணிந்துரை இந்நூற்குப் பெருமை தருகின்றது. அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி படைக்கின்றேன். சிறந்த திறனாய்வு முன்னுரை ஒன்றைத் திருமிகு சிலம்பொலி செல்லப்பனார் எம்.ஏ, பி.டி வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். திறனாய்வின் சின்னமாகவும் நூலின் நல்லறிமுகமாகவும் இது திகழ்கின்றது. அவர்கட்கு மனமுவந்த நன்றி படைக்கின்றேன். குருகுலம் அச்சகத்தார் வேண்டும் வகையெல்லாம் ஒன்றி நின்று அச்சேற்றிச் சிறந்த நூலுருவமாக்கியமை வாழ்த்திற்கும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது. எனது வாழ்வுப் பணிகளில் இஃதும் ஒரு மன நிறைவுப் பணி என்பேன். அறுபதாண்டு நிறைவில் இந்நிறைவும் இணைவது மகிழ்ச்சிக் குரிதாகின்றது இதனை எனது மணிவிழா முத்திரை நூல் எனலாம். தமிழ்ப்பெருமக்கள் முன் இதனை வைப்பதில் பேருமிதங் கொள்கின்றேன். - வணங்கி அமைகின்றேன். "கலைக்குடில்" அன்பன், நாகப்பட்டினம். கோவை. இளஞ்சேரன்.