பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4. இருப்பைப் பூவைக் கொண்டு குடிநீர் செய்து பருகச் சிறுநோய்கள் தீரும். பூவை மருந்தாக்கி உண்டால் பித்த சுரம் போகும். இருப்பைப் பூவின் சாற்றை எடுத்து இரும்புத் தூளில் கலந்து பக்குவம் செய்து அத்தூளை மைபோன்று குழைத் தெடுக்கலாம்.

5. கவிர்ப் (வெண்மைப்) பூச் சாற்றைக் கொண்டு ஈயத்தை நீறாக்கலாம்.

6. ஆவிரைப் பூ இதழைத் தேனில் இட்டுக் குல்கந்து செய்து உண்பர். இதனால் குளிர்ச்சியும் உடல் வலிவும் பெருகும்.

7. செவ்வலரி மலரால் பக்குவமாக்கப்படும் மருந்து பல நோய்களைத் தீர்க்கும். இதில் தோன்றும் மஞ்சள் நிறச்சாறு கொடிய நஞ்சு.

8. சண்பகப் பூ உடல் மறுவையும் பருவையும் நீக்கும்.

9. நந்தி வட்டப் பூ கண்நோய் பலவற்றையும் போக்கும்.

10. ஒமப் பூவிலிருந்து வடிக்கப்படும் ஒம நீர் மருந்துப் பொருள்: வயிற்று நோய்கள் பலவற்றையும் நீக்கும்.

11 பருத்திப் பூ வெள்ளை, குருதி அழல் நோய், புண் முதலியவற்றிற்கு மருந்து.

12. செம்பருத்திப்பூவை எண்ணெயிலிட்டு ஊறவைத்து முடி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

13. மாதுளை முகிழைக் காயவைத்துப் பொடி செய்து இருமலுக்குக் கொடுக்க அது நீங்கும்.

14. தெங்குப் பூ உடலின் நஞ்சு நோய்க்கு மருந்து.

15. எட்டி பூ கண் நோய்க்கு நல்ல மருந்து.

16. வாழைப்பூ வயிற்றளைவு, கைகால் எரிச்சல், எருவாய்க் கடுப்பு, இருமல் முதலியவற்றிற்கு அரிய மருந்து மேக நோயை ஒழிக்கும்.

17. அகத்தி இலைக்கீரை சமையலுக்குப் பயன்பட்டு உடல் வெப்பத்தைத் தணிக்கும்.