பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

"புலவர் திருவள் ளுவரன் றிப் பூ மேல் சிலவர் புலவரெனச் செப்பல்” என்பது மதுரைத் தமிழாசிரியர் செக்குன்றூர்க்கிழார் பெயரில் திருவள்ளுவமாலையில் கோக்கப்பட்ட உலகப் பூ. "இப் பூ மிசை என்னன் பாலிக்கும்" என்பது திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்தது. ஆசிரியரும் அரசரும் பாடினாலும் ஆண்டிகளும் பேச வேண்டுமன்றோ? இஃதோ சிங்கன் சிங்கி வினா விடை:

  "இந்தப் பணியைநி பூணப் பொறுக்குமோ சிங்கி?
  -பூவில் (உலகில்) ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண்
   சிங்கா" 8

குற்றாலக் குறவஞ்சி உலகிற்குச் சூட்டிய பூ இது, மேலும் செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும், பூ பாகம், பூகம்பம்;9 பூபதி, பூதேவி, பூசுரர், பூகண்டகர் 10 -எனப் பல சொற்கள் பூவாகவே உலகைப் பூக்க வைக்கின்றன.

உலகம் ஒரு நீர்ப் பூ

உலகம் பூ என்பது சொல்லளவில் மட்டும் அன்று; தோற்றத்தாலும் உலகம் பூ ஆகும். அதிலும் உலகம் ஒரு நீர்ப்பூ. 'வான வெளியில் அமைந்த அண்டங்களில் ஞாயிறு, தீப் பிழம்பான அண்டம். அதன் பிசிராகத் தெறித்த ஒரு பிழம்புத் துண்டே இப்பூவுலகம் ஆயிற்று’ என்பது வான நூலார் கொள்கை.


7 அப் தே : கோயிற்பதிகம் : 1. 8. குற. கு: 185. 9 'பூகம்பம் பிறந்ததுவும்'-பாரதம் : சூதுபோர் : 259 10 'பூகண்டகர் கோவொடு ஆகண்டலன் மாய'-தக்க : 698.