பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



26

இதில் மலர் எண்ணிய பயனைத் தருவதால் "பயன் கெழு மலர்" எனப்பட்டமை மலருக்குப் புத்தம் தரும் ஒரு சிறப்பாகும்.

புத்த மதம் கடவுள் மறுப்புக் கொள்கையுடையது. ஆனால் பல்கிப் பெருகிய புத்த மதத்தில் வழிபாடும் இடம் பெற்றது. பூவைப் படைத்து வழிபடல், மாலையைப் படைத்து வழிபடல் மரபாயின. எனவே, புத்தத்திலும் பூ ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

"காட்டு மலர் இவில்லி எப்படி வளர்கின்றன என்றுகவனியுங்கள். அவைகள் உழைப்பதில்லை; நூற்பதில்லை. என்ருலும் சாலமோனே தனது மேம்பட்ட பெருமைகள் எல்லாவற்றிலும் இம்மலர்களில் ஒன்றைப் போல உடுத்தியதும் இல்லை என்று உங்களுக்குச் சொல்லுகின்றேன்"49 -இஃது

இயேசு பெருமானது வாய்மொழி. கிறித்துவர் தலைமேல் கொண்டு போற்றும் மலைப்பொழிவில் ஒரு வாய்மொழி. உலகம் அளாவிய கிறித்துவ மதத்தில் பூ, ஒரு தொழுகைப் பொருளாக இடம்பெற வில்லை. என்றாலும் அதனைத் தோற்றியவரால் சான்றாகக் காட்டப்படும் பேற்றைப் பூ பெற்றுள்ளமை ஒரு தனிச் சிறப்பாகும்.

இஃதேபோன்று முகமது நபி அவர்கள் வாய்மொழியிலும் பூ மலர்ந்தது:

"இறை நம்பிக்கையாளர்க்கு இறப்பு வரும்போது வானவர்: 'உயிரே புறப்பட்டு வா' என்று அழைப்பர். அப்போது, 'அல்லாவினுடைய அருளின் பக்கமும், மணமுள்ள பூவின் பக்கமும், உன்மேல் சினமற்ற இறைவனின் பக்கமும் வா’ என்று அழைப்பர்"50

    -இவ்வாறு ஒருமுறை நபி பெருமானார் அருளினார். இவ்வுரையில் மணமுள்ள பூ அல்லாவினுடைய அருளோடும் சினமற்ற இறைவனோடும் தொடர்பு படுத்தி இரண்டிற்கும் இடையில் வைத்து ஓரளவில் சமநிலையில் அருளப்பட்டுள்ளது. இது பூவிற்கு இசுலாமிய மதப் பாங்கில் கிடைத்த பெருமை எனலாம்.

________________

9 விவி:மத்தேயு 6:28.

50 அல். அதீசு: உம்மு சல் மா ரவி அறிவிப்பு.