பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27 ஆன்மவியல் உலகில் சீன நாட்டுக் கன்பூசியம் குறிக்கத் தக்க கோட்பாடுகளைக் கொண்டது. அஃதொரு மதம் என்றே சுட்டிக் கூறப்படுவது. தி. மு., கி. மு.வில் தோன்றிய பழைமை உடையது. அதன் மூலவரான கன்பூசியசு சீன மக்களால் ஏறத் தாழ ஒரு தெய்வமாகவே கருத்தப்படுகின்றார். அவர் ஆன்மவியல், அரசியல், வாழ்வியல், கலையியல் முதலியவற்றிற்குத் திருந்திய கோட்பாடுகளை வகுத்தவர். கலையியலின் அவரது கோட்பாட்டில் பூ இணைக்கப் பட்டது. "மக்கள் கலை பல அடித்தளங்களைக் கொண்டது. அவற்றில் ஒன்று பூ பயரிடும் கலை' -என்பது அவரது கருத்து, மேலே காட்டப்பட்டவை போன்று எஞ்சியுள்ள ஆன்மவியல் கோட்பாடுகள் யாவற்றிலும் பூ பூரிக்கின்றது. தமிழ் கூறும் உலகில் தனிப் பூரிப்பு உலகத்தின் சிறப்பிலெல்லாம் விரிந்து கமழும் பூ, நம் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு தனி மலர்ச்சி பெற்றுள்ளது. தனியிடம் என்பதைவிடத் தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளது என்று குறிக்க வேண்டும். ஏனெனில், பூ தமிழர் தம் வாழ்வுடன் ஒன்றியது. வாழ்வியலின் ஒவ்வொரு முனையிலும் பின்னிப் பிணைந் துள்ளது. - தமிழ்ப் பெரும் சான்றோர், மாந்தர்தம் வாழ்வியலை உலகத் தில் ஒரு தனிச் சிறப்புடன் வகுத்தனர். வாழ்விற்கு இலக்கணம் படைத்தனர். வாழ்வு இயல்-வாழ்வியல் என்றால் வாழ்வின் இயற்கை இலக்கணம் என்று பொருள். அப்பொருளுக்கு உண்மை படைத்தனர் தமிழர். வாழ்வை மிக நுணுகி ஆய்ந்து அதனை மன உணர்வு வாழ்வு பொறிச் செயல் வாழ்வு’ என இரண்டாகக் கண்டனர். அவற்றை அக வாழ்வு, புறவாழ்வு எனக்கொண்டு ஒர் ஒழுங்கை அமைத்து அவ்வொழுங்கு வழி ஒழுக்கம் கண்டு அவ்வொழுக்கத் திற்குத் திணை' என்னும்சொல்லைப் படைத்து, "அகத்திணை' “புறத்திணை' எனக்குறியிட்டனர். இக்குறியீட்டின் அடித்தளம்