பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 87 இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியத்தில் இவ்வடசொல் புகுவானேன்? ஆம், புகுத்தப்பட்டது.

ஆனால், இவ்வாறு புகுத்தியோருக்கும் தமிழக உணர் வாகிய மலர், மனத்தை விட்டகலவில்லை. அரசனுக்குரிய சின்னமாம் தார், வணிகர்க்கும் வேளாளர்க்கும் உண்டு என்று கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே' என்றும் 'வேத்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே’58 -என்றும் படைத்து மொழிந்தனர். இவற்றின் மூலம், வணிகர்க்கும். வேளாளர்க்கும் தலையில் சூடும் கண்ணியையும், மார்பில் அணியும் தாரையும் சின்னங்களாக ஒட்டினர். இவ் வொட்டுக்குப் பின்னரும் தொல்காப்பியத்திலும் பிற வற்றிலும் பார்ப்பனரெனத் தவறாகக்கொண்ட அந்தணர்க்கு ஒரு பூ குறிக்கப்படவில்லையே எனக் குறைபட்ட உள்ளத்தார் இருந்தனர்.

சங்க நூல்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் என்பார். இவர் உரை வழியில் ஒர் இடுக்கு வைத்துக்கொண்டு, 'தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை'5 9 -என்னும் கலித்தொகைக்கு விளக்கம் தருபவர், "அத்தணர் களவொழுக்கம் கூறிஞர்'50 -என்று பார்ப்பனருக்குத் தாமரை உரியது என்று குறிப்பாகக்காட்டினர். பார்ப்பனர் சாதியில் உயர்ந்தோர் என்று அறிமுகம் செய்தமைக்கு ஏற்பப் பூவில் சிறந்த தாமரையை அவர்க்கெனத் தேர்ந்து படைத்துமொழிந்து உள்ளுக்குள் பூரித்தனர். மெய்யாக மட்டுமன்றிப் பொய்யாகவும் பேசுங்காலும் மலர் உணர்வு நிற்கக் காண்கின்றோம். இதற்குக் காரணம் இத்தமிழ் மண்ணில் காலூன்றியதால் ஏறிய உரம் என்றே கொள்ள நேர்கின்றது.

57)தொல்:பொருள்:626 58)தொல்:பொருள்:626 59) கலி ; குறிஞ்சி 16 60) கலி: குறிஞ்சி 16 உரை