________________
40 தும்பைப் பூ. இதனைக் கைகலக்கும் இருதிறப் படைகளுமே சூட வேண்டும். இந்நிலையில் எப்பக்க வீரர் என்று அறிவதற்கு வாய்ப்பில்லாது குழப்பம் நேரும். குழப்பமான இந்நிலையைத் தவிர்ப்பதற்குத் தம் அரசர்க்குரிய பூவைச் சூடிக்கொண்டால் இன்ன வேந்தர்படை என்று வேறுபாடு தெரியும். இவ்வாறு, பட்டது. "வேந்து இடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ் போந்தை, வேம்பே, ஆர் என வருஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்71 -Sfன வகுக்கப் இதனால், மலர் ஓரு புரட்சியையே உண்டாக்கியதாயிற்று. களத்தில் நிற்குங்கால் அரசரும் விரரும் ஒரே வகைப் பூவைச் சூடுவதன் மூலம் அரசன், குடிமகன் என்ற வேறுபாடின்றிச் சம நிலை பிறக்கின்றது. இச்சமநிலை பூவால் விளைந்ததன்றோ? 'வாழ்க, சமசிலைப்படுத்திய பூ' என்று வாழ்த்தவேண்டும். முடி மன்னருக்கு மேலே குறிக்கப்பட்ட மூன்று பூக்கள் வகுக்கப்பட்டிருப்பினும், வேறு மலரில் மனம்பற்றிய மன்னர் தத்தம் விருப்பப் பூக்களையும் சூடிக்கொண்டதைக் காண்கின்றோம். நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு மந்தாரப் பூவின்மேல் விருப்பம் உண்டாயிற்று. புராணங்கள் இப்பூவை இந்திரனுக்கு உரியதாகக் காட்டும். இதன் தொடர்பிலும் இப் பாண்டியனது விருப்பம் எழுந்திருக்காம். இந்நெடுமாறன் மந்தார மாலையையும் அணிந்ததைப் பாண்டிக்கோவை என்னும் இலக்கியம், மண்டா னிறைந்த பெரும்புகழ் மாறன் மந்தார மென்னும் தண்டாரான்>32 -என அறிவிக்கின்றது. இது போன்று பிற மன்னரும் தத்தமக்கு விருப்பமான பூக்களையும் சின்னமாகச் சூடிக்கொண்டனர். ஆனால், எப்பூவைக் கொண்டாலும் சின்னமாகக் கண்ணியும் தாருமே கொள்ளப்பட்டன. 71 தொல்: பொருள் : 68: 8-5 72 பான் : கோ: 71